Monday , September 28 2020
Breaking News

இலங்கை

ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியராக உள்வாங்க கோரிக்கை.

பெருந்தோட்ட பகுதிகளில் உட்பட 5 மாகாணங்களில், ஆசிரிய உதவியாளராக இருந்து தமது தகைமைகளை நிறைவு செய்துள்ளவர்களை ஆசிரியர்களாக உள்வாங்கி அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறிப்பிட்டார். ஆணைக்குழுவின் செயலாற்று அறிக்கை தொடர்பான விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றது. இதில் கருத்துரைத்த போதே இவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் அவர் …

Read More »

கொழும்பு துறைமுக பாரவூர்தி சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கைகள்.

ஒருகொடவத்த சுங்கத்தளத்தில் நிலவும் முறையற்ற நடவடிக்கைகளுக்கு தெரிவித்து கொழும்பு கொள்களன் பாரவூர்தி சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More »

நியூ டயமன் கப்பல் உரிமையாளரால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள இடைக்கொடுப்பனவு.

தீ பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பல் மூலமாக இடைக்கொடுப்பனவாக கோரிய 340 மில்லியன் ரூபாவை கப்பலின் உரிமையாளர் இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Read More »

புகையிரத்துத்துடன் மோதிய பாடசாலை வான். தெய்வாதீனமாக உயிர் தப்பிய மாணவிகள்.

கட்டுநாயக்க பிரதேசத்தில் பாடசாலை சிற்றூர்தி ஒன்று புகையிரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.எவ்வாறாயினும் சம்பவத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை கட்டுநாயக்க சரத் மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவை வீதியில் கொழும்பு சிலாபம் நோக்கி பயணித்த புகையிரததுடன் மோதி குறித்த சம்பவம் நடந்துள்ளது. எவ்வாறாயினும் சிற்றூர்தியில் பயணித்த மாணவர்கள் மற்றும் சாரதியும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

Read More »

நேற்றய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்ப்பில் வெளியான தகவல்.

நாட்டில் நேற்றய தினம் 11 பேருக்கு Covid – 19 தொற்றுறுதியாகியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 7 பேருக்கும் அமெரிக்காவிலிருந்து இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கும் எத்தியோப்பிய மற்றும் ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய தலா ஒவ்வொருவரும் Covid – 19 தொற்றுக்குள்ளானவர்கள். இதன்படி நாட்டில் Covid – 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் …

Read More »

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் றம்பதெனிய பகுதியில், பாரிய பாறை ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக, குறித்த பாறை சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், வீதியில் சரிந்து வீழ்ந்துள்ள பாறையை அகற்றும் பணியில் சம்மந்தப்பட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியில் மேலும் சில பாறைகள் பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. …

Read More »

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை.

ஊவா, கிழக்கு,வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு,வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களிலும் நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய …

Read More »

“இரத்மலானை ரோஹா” காவல்துறையினரால் சுட்டுக்கொலை.

போதைப்பொருள் வர்த்தகம் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தேவாமுனி ஹெரல்ட் ரொஹானா டி சில்வா என்ற “இரத்மலானை ரோஹா” இன்று அதிகாலையில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Read More »

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணபட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையின் Covid – 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,324 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்ட இருவரும் ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், Covid – 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 182 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று …

Read More »

20 வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 06 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்.

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இன்று உயர்நீதிமன்றில் எதிர்ப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் வரைவின் சில கருத்துக்கள் தற்போதைய அரசியலமைப்புக்கு முரணானது என்று அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அந்த திருத்தச் சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை நிறைவேற்ற வேண்டுமாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுசன வாக்கெடுப்பின் …

Read More »