Wednesday , September 30 2020
Breaking News

இலங்கை

வேதன அதிகரிப்பிற்கு அழுத்தம் கொடுக்கப்படும்.

பெருந்தோட்ட மக்களுக்கான வேதன அதிகரிப்பு விடயத்தில் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன், பிரதித்தலைவர் எல் லோரன்ஸ், நிதிச்செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று ஹட்டனில் உள்ள கட்சியின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் …

Read More »

அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான விசேட செய்தி

ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என அதிர்ப்பர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை

20 வது அரசியலமைப்பு .திருத்தம் தொடர்பில் பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்றய தினம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை என அமைச்சர் சி பி ரத்நாயக்க தெரிவித்தார்.

Read More »

சிவாலிங்கம் பிணையில் விடுதலை

நீதிமன்றத் தடை உத்தரவைமீறி திலீபனின் நினைவேந்தலை நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாலிங்கத்திற்கு, கடும் எச்சரிக்கையின் பின் பிணை வழங்கி விடுதலை செய்ய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தவிர அவருடன் கைது செய்யப்பட்ட, வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கரவண்டிச் சாரதியும் பிணையில் விடுவிக்கபட்டுள்ளார். நேற்றய தினம் திலீபனுக்கு நினைவேந்தல் நடத்திய குற்றச்சாட்டில், காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட சிவாஜிலிங்கம் இன்றய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த …

Read More »

அரச வர்த்தமானிக்கு எதிர்ப்பு.

எந்தவொரு ஆணவமும் இன்றி அரச காணிகளில் வசிக்கும் நபர்களுக்கு அந்த இடத்தினை உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொடுப்பது தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு சூழலியலாளர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். குறித்த வர்த்தமானி அறிவித்தலை தொடர்ந்து வனப்பகுதிகளை கைப்பற்றும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More »

தற்கொலைக்கு முயன்ற ஹட்டன் இளைஞன் – மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம்.

நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற 23 வயது இளைஞரை ஹட்டன் காவல் துறையினர் மீட்டுள்ளனர். மாவலி கங்கையின் கிளை நதியான ஹட்டன் ஓயாவில் அபோஸ்லி தோட்டத்திற்கு குறுக்கே ஓடும் நீர்வீழ்ச்சி ஒன்றில் குதித்தே அவர் தற்கொலைக்கு முயட்சிற்சித்துள்ளார். இதன்போது ஹட்டன் காவல்துறையினருக்கு நபரொருவர் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த இளைஞரை காவல் துறையினர் மீட்டுள்ளனர். இந்நிலையில் 23 வயதுடைய மேற்படி இளைஞன் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் இருந்து …

Read More »

அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்து – மூவர் பலி

இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகினர். திவிரும்பிட்டி பகுதியில், பாரவூர்தி ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதில் இன்று காலையில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த 48,53,57 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Read More »

நீரில் மூழ்கிய நபருக்கு நடந்த பரிதாபம்.

மின்னேரியா – கிரிதல நீர்த்தேக்கத்தில் நண்பர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர் 48 வயதுடைய கிரிந்தலே முதலாம் மைல் கல் பகுதியில் வசித்த வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

Read More »

இ.போ.சபையின் மன்னார் சாலை பணியாளர்கள் போராட்டம்.

இலங்கை அரச போக்குவரத்து சபையின், மன்னார் சாலை பணியாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னாரில் அரச போக்குவரத்து சேவையினை மேட்கொள்ள தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தை மன்னார் நகர சபை நேற்றிரவு முன்னறிவித்தல் இன்றி மூடியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார். மன்னார் நகரசபையினால் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து தரிப்பிடம், பொது பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டதை அடுத்து அங்கு, அங்கு அரச மற்றும் தனியார் சேவைகள் …

Read More »

20 ஆம் திருத்த சட்டமூல வரைபு குறித்த குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் முன் வைப்பு

20 ஆம் திருத்த சட்டமூல வரைபு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட ஆளும் கட்சி குழுவின் அறிக்கை இன்றைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் ஜி எல் பீரிஸ் தலைமையிலான குறித்த குழுவின் அறிக்கை, நேற்றைய தினம் அலறி மாளிகையில் வைத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 20 ஆம் திருத்த சட்டமூல வரைபு தொடர்பில் முன்னதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள முரண்பாடு நிலைமை தொடர்பில், கடந்த தினம் …

Read More »