Saturday , September 26 2020
Breaking News

இலங்கை

“சுமீர” கொட்டாஞ்சேனையில் வைத்து கைது

ஒழுங்கமைந்த குற்றசாட்டுகளுடன் தொடர்புடைய “சுமீர” என்ற சுமீர மதுஷங்க கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்

Read More »

இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில் ரிசார்ட் பதியுதீன்

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும், சஹரான் ஹஸீமினது குழுவின் ஆலோசகராக அறியப்பட்ட நெளபர் மௌலவியிடம் 6 மணித்தியாலங்கள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்குமூலம் வழங்குவதற்கான ஏப்ரல் 21 தாக்குதலின் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் அவர் முன்னிலைப் படுத்தப்பட்டார். முன்னதாக கைது செய்யப்பட்ட நெளபர் மௌலவி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பில் தடுத்துவைக்கப்படுள்ளார். இந்த நிலையில், மூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவின் …

Read More »

கோட்டே மாநகர சபையின் புதிய தலைவராக ஐ எம் பிரேமலால் தெரிவு

கோட்டே மாநகர சபையின் புதிய தலைவராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதிப்படுத்தும் ஐ எம் பிரேமலால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நகரசபை தலைவராக மதுர விதானகே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவாக்கியமையினால் குறித்த வெற்றிடத்துக்கு பிரேமலால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Read More »

சற்று முன்னர் மேலும் மூவருக்கு கொரோனா.

ஐக்கிய அரபு இராட்ச்சியம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த மூவருக்கு Covid-19 உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை 3266 ஆக அதிகரித்துள்ளது.

Read More »

நிவ் டயமன் கப்பலின் எரிபொருள் மாதிரிகளை அரச பகுப்பாய்வு அனுப்ப நடவடிக்கை.

தீ பற்றுதலுக்கு உள்ளான எம் ரீ நிவ் டயமன் கப்பலின் இயந்திர அறை மற்றும் கப்பலின் உள்ளக பகுதிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட எரிபொருள் மாதிரிகள் இன்று அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் கையளிக்கப்படவுள்ளன. கடற்பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் டேர்னி பிரதிப்குமார இதனை தெரிவித்துள்ளார். குறித்த எரிபொருள் மாதிரிகளை பெற்று கொண்ட குழுவினர் இன்று கொழும்பு நோக்கி வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய …

Read More »

நாளை முதல் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம் – சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

நாளை முதல் வீதி ஒழுங்கைச் சட்ட்தின் கீழ் முற்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகள் ஆகியன பேருந்து ஒழுங்கையில் மாத்திரமே பயணிக்க வேண்டுமென காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

இரண்டாவது நாளாக அமுல்படுத்தப்பட்டுள்ள பேரூந்து ஒழுங்கு முறை.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய மற்றய நகரங்களிலும் பேரூந்து ஒழுங்கு நடைமுறை இன்றய தினமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இன்று காலை 6 மணி தொடக்கம் 10 மணி வரையில் கொழும்புக்குள் பிரவேசிக்கும் பிரதான நான்கு வீதிகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி காலி வீதி, கைலெவல் வீதி, ஸ்ரீஜெயவர்தன முதல் கோட்டே வரையான வீதிகளில் இன்று முதல் பேருந்து ஒழுங்கு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வாகன நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காக …

Read More »

தேங்காயின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்.

தற்போதைய தேங்காயின் விலை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் தேங்காய் ஒன்றின் விலையானது 100 ரூபா வரையில் அதிகரிக்கும் என தெங்கு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது தேங்காய் ஒன்றின் விலையானது 70 முதல் 85 வரை காணப்படுகிறது. மாதமொன்றிற்கு 250 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படுவதோடு, அதில் சுமார் 150 மில்லியன் வரை நுகர்வோரின் பாவனைக்கு பயன்படுத்தப்டுகின்றது. எவ்வாறாயினும் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை …

Read More »

கிண்ணியா கட்டையாறு பகுதியில் கெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.

கிண்ணியா கட்டையாறு பகுதியில் கெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் கிண்ணியா கடையாறு பகுதியை சேர்ந்த 35 வயது என காவற்துறையினர் தெரிவித்தனர். இதன்போது அவரிடம் இருந்து 3 கிராம் 760 மில்லிகிராம் கெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் மீரிகம – பல்லேவெல பகுதியில் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். …

Read More »

மின் உற்பத்தி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள விடயம்

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மின்சார தேவையில் 70 சதவீதத்தை மீள் புதுப்பிக்கும் வகையில் எரிசக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்வதற்கு திட்டமிட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனதிபதி செயலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Read More »