Monday , September 28 2020
Breaking News

இலங்கை

வீடொன்றின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண்ணொருவர் பரிதாபமாக பலி

நவகமுவ-கொதலாவல பாடசாலை மாவத்தையில் உள்ள வீடொன்றின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும், சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் தாயும் சகோதரரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் 22 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு. காலி, களுத்துறை, கேகாலை …

Read More »

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,123ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,123ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 186 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,925 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More »

துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு

காலி-தொடகொட பகுதியில் உள்ள தனியார் இடம் ஒன்றில் இருந்து டி 56 ரக துப்பாக்கி மற்றும் 123 ரவைகள் என்பன மீட்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இடத்தின உரிமையாளர் இடத்தை சுத்தம் செய்யும் பொழுது இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டள்ளதாக கூறப்பட்டுள்ளது.இது தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவறுத்தல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

இரு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகின

தங்காலையில் உள்ள பழைய சிறைச்சாலை கட்டிடத்தை, தடுப்புக் காவலாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் போல் ரூம் டான்சர்ஸ் விளையாட்டுக்கான தேசிய மாநாட்டின் பதிவை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியாகியுள்ளது. விளையாட்டு சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களின் படி, குறித்த …

Read More »

தேசிய பட்டியல் விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் அதுரலிய ரதன தேரர் உள்ளிட்டோரை உள்ளடக்கிய அபே ஜனபல கட்சியானது உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.அக்கட்சியில் ஏற்பட்டுள்ள தேசிய பட்டியல் வேட்பாளர் பிரச்சினையை முன்னிலைப்படுத்தியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Read More »

விசேட படகுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள எம்.ரி.நியூ டயமன்ட் கப்பல்

சங்கமன்கண்டி பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில், ஆழ்கடல் பரப்பில் தீப்பற்றிய, எம்.ரி.நியூ டயமன்ட் கப்பலில், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், குறித்த கப்பல் இந்தியாவின் விசேட படகுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பணிகளில் இணைந்திருந்த இந்திய கடலோர பாதுகாப்பு படை தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் மிதந்து செல்வதை தவிர்ப்பதற்காக, நேற்றிரவு 7 மணியளவில், ஏ.எல்.பி விங்கர் ரக படகுடன் …

Read More »

கல்வி அமைச்சிடம் இருந்து மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

2018 ஆம் ஆண்டு வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய இந்த வருடத்திற்காக தேசிய கல்வி கலாசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பிலான வர்த்தமானி இன்று பிரசுரிக்கப்படவுள்ளது. கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் முறைமையினால் மாத்திரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கமான www.moe.gov.lk க்கு பிரவேசித்து குறித்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பபட வேண்டும் என …

Read More »

அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரணில் விக்ரமசிங்க

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இவர் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட்சியம் ஒன்றை வழங்குவதற்கே முன்னாள் பிரதமர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

அரசாங்கத்தின் செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது-எம்.ஏ.சுமந்திரன்

19 ஆம் திருத்தத்தை நீக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளமை ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம் இலங்கையின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அரசியலமைப்பு ஒரு சமூக ஒப்பந்தம். நாட்டிலுள்ள சகல …

Read More »

20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு நேற்றைய தினம் அமைச்சரவை அனுமதி வழங்கியது

வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக 20ம் திருத்தச் சட்டமூலம் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். இன்றைய தினத்திற்குள் வர்த்தமானி வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு நேற்றைய தினம் அமைச்சரவை அனுமதி வழங்கியது. இது தொடர்பான யோசனையை நீதியமைச்சரான அலி சப்ரி அமைச்சரவையில் சமர்பித்திருந்தமை குறிப்பிடதக்கது.

Read More »