Monday , September 28 2020
Breaking News

இலங்கை

மட்டக்களப்பு சிறையில் இருந்து கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட சிவனேசந்துரை சந்திரகாந்தன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறையில் இருந்து இன்று பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளைய தினம் வாக்குமூலம் வழங்குவதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முற்பகல் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் அவர் கொழும்புக்கு …

Read More »

20 ஆவது திருத்தத்திற்கு பொது ஜன வாக்கெடுப்பு தேவையற்றது

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என சட்டமா அதிபர் நீதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

Read More »

பாடசாலை வந்த மாணவர்களை மீண்டும் வீடுகளுக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்கள்

சுமார் 75 வருடங்கள் பழமை வாய்ந்த அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் தோமஸ் மண்டபத்தின் மேல் மாடி ஆபத்து நிறைந்து காணப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை எக்காரணங் கொண்டும் கல்வி கற்பதற்கு அனுப்பிவைக்க முடியாது என தெரிவித்து மேற்படி கட்டிட வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (02) காலை கல்லூரி அதிபரின் காரியாலயத்துக்கு முன்பாக திரண்டு கோரிக்கையொன்றை முன்வைத்தனர். மேலும், …

Read More »

கொட்டாஞ்சேனை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

கொட்டாஞ்சேனை-சுமித்ராமபுர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 38 வயதுடைய குறித்த பெண் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி ஒரு இலட்சத்திற்கு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

Read More »

காலநிலையில் அடுத்த 12 மணிநேரத்திற்கு ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் பெய்து வரும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, சில மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More »

ஒரு இலட்சம் குடும்பத்திற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பம்

வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பத்திற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பமாவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான கையூட்டலும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே …

Read More »

முறையான வேலைத்திட்ட அவசியம் உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பொருட்களின் விலை அதிகரிக்கும்போது நகர, மத்திய தரப்பினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டமொன்று அவசியமாகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் முதலாவது கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொவிட் நோய்த் தொற்று காலத்தில் விவசாய பொருட்களை மலிவு விலையில் நேரடியாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வழிமுறையை பின்பற்றி இடைத்தரகர்களின் …

Read More »

ஹெரோயின் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் 403 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 403 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை 6.30 மணி தொடக்கம் இன்று அதிகாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஹெரோயின் போதை பொருள் குற்றச்சாட்டில் 176 பேர் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் 96 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More »

கடும் காற்றினால் 26 வீடுகள் பகுதியளவில் சேதம்

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று வீசிய கடும் காற்றுக்காரணமாக 26 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் இதனைக் தெரிவித்துள்ளார். இதற்கமைய மொரவௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 16 வீடுகளும் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 4 வீடுகளும் கிண்ணியா பிரதேச செயலாளர் …

Read More »

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்

நாட்டில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதி வரையில் 22 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது. கட்டாரில் இருந்து நாடு திரும்பி நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேருக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 3071 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள 191 பேர் தொடர்ந்தும் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் …

Read More »