Wednesday , September 30 2020
Breaking News

இலங்கை

தொடருந்து போக்குவரத்து சேவையில் இருந்து விலக தீர்மானம்

சீன தயாரிப்பில் உருவான பெட்டிகள் இணைக்கப்பட்ட தொடருந்து போக்குவரத்து சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட இதனை தெரிவித்துள்ளார்.சீன தயாரிப்பில் உருவான பெட்டிகள் இணைக்கப்பட்ட தொடருந்துகளின் வேக தடுப்பில் நிலவும் குறைப்பாடுகள் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றிரவு முதல் இந்த சேவை புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

Read More »

ஒருங்கிணைப்புக் குழுக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

பல மாவட்டங்களில் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்து தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பங்களிக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.நேற்றைய தினம் ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More »

வெளியேறினார் அகிலவிராஜ் காரியவசம்…!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியம் வழங்க முன்னிலையாகியிருந்த நிலையில் அகில விராஜ் காரிய வசம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இரண்டு மணித்தியாலங்கள் சாட்சியங்களை வழங்கியதன் பின்னர் வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

இரும்பு தொழிற்சாலையொன்றில் தீ பரவல்

நீர்கொழும்பு-பமுணுகம-நூகபே சந்திக்கு அருகில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் செயற்பட்டுள்ளனர். இதேவேளை கொச்சிக்கடை-பல்லன்சேன பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடு ஒன்றில் இன்று காலை தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது தீயை அணைப்பதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

பம்பலபிடிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரவிக்கப்பட்டு நீர்கொழும்பு-ஏத்துகால பகுதியில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நீர்கொழும்பு காவல்துறையினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்த 27 கிராம் ஐஸ் போதைப்பொருளும் 21 கிராம் ஹெரோயின் மற்றும் 36 ஆயிரம் ரூபா பணமும் …

Read More »

புத்தளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்து

புத்தளம்-அட்டவில்லுவ பிரதேசத்தில் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணொருவர் மீது பாரவூர்தி ஒன்று மோதியதில் குறித்த பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார். நேற்று (30) இடம்பெற்ற இந்த விபத்தில் 70 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், குறித்த பெண் புத்தளம் அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் …

Read More »

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ளார்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் இன்று (31) முன்னிலையாகவுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் குறித்த ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 21ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவு அழைப்பு விடுத்திருந்த நிலையில், குறித்த …

Read More »

நேற்றைய தினத்தில் மாத்திரம் 17 கொரோனா தொற்றாளர்கள்

நாட்டில் நேற்றைய தினம் 17 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதற்கமைய இலங்கையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 12 அதிகரித்துள்ளது. இறுதியாக தொற்றுறுதியான 12 பேரும் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய மூன்று பேருக்கும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானது. இது தவிர இந்திய கடலோடிகள் இரண்டு பேருக்கும் நேற்றைய தினம் கொவிட்-19 …

Read More »

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கஃபே அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சில ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் முன்னெடுக்க வேண்டுமென கஃபே அமைப்பு கோரியுள்ளது. இது தொடர்பில் எமது செய்தி பிரிவுக்கு கருத்துரைத்த போதே அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் குறிப்பிட்டார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More »

நாடாளுமன்ற தேர்தலின் போது தமக்கு எதிராக கொலை அச்சுறுத்தல் காணப்பட்டது

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமக்கு எதிராக கொலை அச்சுறுத்தல் காணப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றிப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டில் தேசிய பிரச்சினை ஒன்று உள்ளது. இதன் காரணமாகவே நாட்டில் யுத்தம் ஏற்பட்டது. …

Read More »