Monday , September 28 2020
Breaking News

இலங்கை

நாட்டில் நேற்றைய தினம் 13 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற 10 கைதிகளுக்கும் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், கென்யாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொவிட் -19 தொற்றுறுதியானது.இதன்படி நாட்டில் இதுவரையில் கொவிட்- 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 984 ஆக உயர்வடைந்துள்ளது.இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் 3 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை …

Read More »

தவறுதலாக இடம்பெற்றுள்ள மின் துண்டிப்பு

தேசிய மின்சார கட்டமைப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற திடீர் மின் துண்டிப்பு தவறுதலாக இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. திடீர் மின் துண்டிப்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவின் அறிக்கைக்கமைய இவ்விடயம் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் மீண்டும் அவ்வாறான தவறு இடம்பெறாது என குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த அறிக்கை இன்று பிற்பகல் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நேற்று முன் தினம் குழுவின் அறிக்கை விடயம் தொடர்பிலான அமைச்சர் டலஸ் …

Read More »

32 ஆயிரத்து 816 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை பூர்த்தி செய்துள்ளனர்

தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை பூர்த்தி செய்த 32 ஆயிரத்து 816 பேர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுதனை தடை செய்யும் தேசிய மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. மேலும் 65 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 7058 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை , நேற்றைய தினம் 1580 பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் நேற்றைய தினம் 12 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து நாடுதிரும்பிய 12 …

Read More »

அரசாங்க அச்சுத் திணைக்களம் மூலமாக தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு அச்சுப்பணிகள்

தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அச்சுப் பணிகள் அனைத்தையும் அரசாங்க அச்சுத் திணைக்களம் மூலம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் முன்னேற்றம் குறித்து இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான வசதிகளை முதலாவதாக ஏற்படுத்திக் கொடுக்க …

Read More »

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இணையும் 172 நாடுகள்

உலகளாவிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் நாடுகள் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் தமது விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். செப்டம்பர் 18க்குள் சேர விரும்பும் நாடுகள் உறுதிப்படுத்தப்பட்டு, அக்டோபர் 9 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டிய ஆரம்பக் தொகையை செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி வசதியுடன் …

Read More »

யாழ் நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரள்வு

இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டுச் சென்ற தொடருந்து ஒன்று கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் தடம்புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More »

மீண்டும் எண்ணப்படுமா மாத்தளை மாவட்ட வாக்குகள் ?

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்ட வாக்குகளை மீண்டும் கணக்கெடுத்தால் தமது கட்சியின் வாக்கு எண்ணிக்கையிலோ அல்லது தனக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையிலோ மாற்றங்கள் ஒருபோதும் ஏற்படாது என்றும் இதற்காக தனது அரசியல் வாழ்க்கையை பந்தயமாக வைக்க தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டத்தில் செலுத்தப்பட்ட வாக்குகளை மீண்டும் கணக்கிட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான …

Read More »

ஆனையிறவில் ஹசலக காமினியின் நினைவு தின நிகழ்வு

இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த கோப்ரல் ஹசலக காமினி அவர்கள் 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டிருந்த போது நாட்டிற்காக தனது உயிரை அர்ப்பணித்தார்.இவரது சேவையை பாராட்டி இவரது ஞாபகார்த்தமாக ஆனையிறவில் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தூபி வளாகத்தினுள் 29 ஆவது வருடாந்த நினைவு நேற்று (24) ஆம் திகதி இடம்பெற்றது.

Read More »

கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

கிளிநொச்சி – பரந்தன் – முறுசமோட்டை பிரதேச வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 50 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.கிளிநொச்சி காவற்துறைக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

Read More »

வடமாகாண ஆளுனரிடம் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் மனு கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுனரிடம் மனு ஒன்றை கையளித்துள்ளனர். பட்டதாரிகளுக்கான அரச நியமன கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 450 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பட்டதாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடியதோடு வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது நியமனத்தை உறுதிப்படுத்துமாறு கோரி மனு …

Read More »