Wednesday , September 30 2020
Breaking News

இலங்கை

புகையிலை விற்பனை மற்றும் காட்சிப்படுத்தல் ஆகியவற்றுக்கு தடை

புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தில் மற்றும் பொது பயன்பாடு ஆகியவற்றுக்கு தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் மருத்துவர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மருந்துகள், புகையிலை மற்றும் ஆல்கஹால் தடுப்புக்கான புதிய செயல் திட்டத்தை உருவாக்கும் பயிற்சி திட்டத்தில் இன்று (24) அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Read More »

இலங்கையில் பாம்புகளை அழிவடையாமல் பாதுகாக்கும் நபர்

நமது சூழலில் வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் பாம்புகளின் வடிவ இனங்கள் சூழலுக்கு சிறப்பு மதிப்பையும் சிறப்பினையும் சேர்க்கின்றன. ஆனால் இந்த விலங்கு பற்றி நம் சமூகத்தில் நிலவும் பகுத்தறிவற்ற பயம் காரணமாக அந்த விலங்குகளை அழிக்க பலர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றனர். இந்நிலையில், பாம்புகளை பிடித்து பாதுகாப்பான முறையில் விடுவிக்கும் தந்தை மற்றும் மகன் தொடர்பிலான சம்பவம் ஒன்று ஹபரன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இவர்கள நீண்ட காலமாக இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து …

Read More »

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், வரும் சனிக்கிழமை வவுனியாவில் !

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், வரும் சனிக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வவுனியா, குருமன்காட்டில் உள்ள, பிறின்ஸஸ் ரோஸ் விடுதியிலேயே தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உட்பட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய குழு பிரதிநிதிகள் உள்ளிட்டோர், கலந்து கொள்ளவுள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசன …

Read More »

19 ஆவது திருத்தச்சட்டத்தை, முற்றாக அகற்ற வேண்டாம் – கரு ஜயசூரிய

19 ஆவது திருத்தச்சட்டத்தை, முற்றாக அகற்ற வேண்டாம் என்று, அரசாங்கத்திடம் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீளாய்வு செய்து, அதில் உள்ள குறைபாடுகளை பரந்துபட்ட கலந்துரையாடல்களை நடத்தி நிவர்த்தி செய்யலாம் என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். அதற்குப் பதிலாக 19 ஆவது திருத்தச்சட்டத்தை முற்றாக ஒழிக்கக் …

Read More »

இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இராணுவ சிப்பாய் – தேராவில் இராணுவ முகாம் பகுதியில் பதற்றம்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேராவில் பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவருடன் இராணுவச் சிப்பாய் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தை அடுத்து, நேற்று மாலை பதற்றநிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர், தம்மிடம் தவறாக நடந்து கொண்டதாக இளம்பெண் ஒருவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அப்பகுதி மக்கள் இணைந்து தேராவில் இராணுவ முகாமுக்கு …

Read More »

புதிதாக பதிவு செய்து கொள்வதற்கு விண்ணப்பித்த 40 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிராகரிப்பு

புதிதாக பதிவு செய்து கொள்வதற்கு விண்ணப்பித்த 40 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. புதிதாக பதிவு செய்து கொள்வதற்காக 156 அரசியல் கட்சிகள் விண்ணப்பித்திருந்தன. இவை இந்த வாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போதே, ஆவண தவறுகள், அடிப்படை தேவைகளை நிறைவேற்றத் தவறியமை போன்ற காரணங்களால், இதுவரை 40 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த …

Read More »

எந்தவொரு அமைச்சுக்களின் அபிவிருத்தி திட்டங்களையோ, அதிகாரமளிக்கப்பட்ட திட்டங்களோ, தனது அனுமதியின்றி நடைமுறைப்படுத்தக் கூடாது

எந்தவொரு அமைச்சுக்களின் அபிவிருத்தி திட்டங்களையோ, அதிகாரமளிக்கப்பட்ட திட்டங்களோ, தனது அனுமதியின்றி நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு அறிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இது தொடர்பான கடிதத்தை, அவர் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் மூலமாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விபரங்களை தமக்கு வழங்குமாறும் அந்தக் …

Read More »

காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்ளும் சாலிய பீரிஸ்

காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அறிவித்துள்ளார். எதிர்வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் தாம், பதவி விலகியுள்ளதாக சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தமது பதவி விலகல் கடித்த்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எற்கனவே அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் கூறியுள்ளார். முன்னைய அரசாங்கத்தினால், நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளின் ஒரு அங்கமாக, 2018ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட …

Read More »

மன்னாரில் இளம் பெண் கழுத்து நெரித்து கொலை – இரு பெண்கள் கைது

மன்னார் உப்பளம் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸாரின் புலன் விசாரணையில் மன்னார் நகரில் உள்ள உணவகம் ஒன்றின் சி.சி.ரி.வி கமரா பதிவை வைத்து நெடுந்தீவைச் சேர்ந்த பெண்கள் இருவரும் ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். செட்டிக்குளத்தில் வசிக்கும் பிரதான சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ளார். நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21 ) என்ற இளம் பெண்ணே …

Read More »

செல்வச்சந்நிதி ஆலயத்தில் வல்வெட்டித்துறை நகர சபையினரால் கிருமி தொற்று நீக்கும் செயற்பாடு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் தற்போதுநாட்டிலுள்ள கொரோணா தொற்று அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூகஇடை வெளியினை பேணி ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில் ஆலயத்தில் உற்சவ காலத்தில் நாட்டின் அனைத்துப் பகுதியிலுமிருந்து அடியவர்கள் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ளும் நிலையில் …

Read More »