Thursday , September 24 2020
Breaking News

இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் இலங்கை அரசு மற்றும் சர்வதேசம் இது வரை ஒரு தீர்வையும் பெற்றுத் தரவில்லை.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு கிழக்கில் நினைவு கூறப்படுகின்றது. எங்களுக்கு என தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் போராட்டங்களையும், கண்டன பேரணியையும் மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேசம் இது வரை எங்களுக்கு ஒரு தீர்வையும் பெற்றுத் தரவில்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார். மன்னாரில் இன்று சனிக்கிழமை (22) …

Read More »

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் வெட்டுக்காக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் வெட்டுக்காக, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். கடந்த திங்கட்கிழமை மதியம் கெரவலப்பிட்டிய உப மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறினால், நாட்டின் அனைத்து மின்விநியோக மார்க்கங்களிலும் மின்சாரத் தடை ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் பல மணிநெரம் மின்சாரம் தடைப்பட்டது. சுமார் 8 மணிநேரம் கழித்தே, நாடு முழுவதுக்குமான மின் விநியோகம் சீரடைந்தது. இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய …

Read More »

19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள், 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் ஒழிக்கப்படக் கூடாது – ஜேவிபி

19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள், 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் ஒழிக்கப்படக் கூடாது என்று ஜேவிபி வலியுறுத்தியுள்ளது. ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத், நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 19 ஆவது திருத்தச்சட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக ஏற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹெரத், எனினும், சுயதீன ஆணைக்குழுக்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் நடிவ்க்கை எடுக்கக் கூடாது என்றும் …

Read More »

கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று தெகிவளையில் உள்ள சிறிய விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்

கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று, தெகிவளையில் உள்ள சிறிய விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்று சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 2019 ஏப்ரல் 21ஆம் திகதி காலை 8.45 மணியளவில், நட்சத்திர …

Read More »

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற ஆசனத்துக்குப் போட்டியிடுவற்கு அனுமதிக்கும் வகையிலா 20 ஆவது அரசியலமைப்பு ??

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற ஆசனத்துக்குப் போட்டியிடுவதை தடை செய்யும், 19 ஆவது திருத்தச் சட்டப் பிரிவுகள், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம், முற்றாக நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனைகள் குறித்து அரச தரப்பு கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. அடுத்த மாத நடுப்பகுதியில் இந்த யோசனைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற ஆசனத்துக்குப் போட்டியிடுவற்கு அனுமதிக்கும் …

Read More »

கஜேந்திரகுமார் சபையை தவறாக வழிநடத்துகிறார் – இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர

இறையாண்மையை முதன்மைப்படுத்தி போர் குற்றங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது என்று, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “இந்த நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். அது சரியானதே. ஆனால் அந்த இறையாண்மை நிச்சயமாக சமரசத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். நாட்டில் …

Read More »

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும், தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா தொடர்ந்தும் பங்களிக்கும் என்றும், இந்திய தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உறுதியளித்துள்ளார். இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் நேற்று மாலை இந்திய தூதுவர் கோபால் பாக்லேவை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று மாலை …

Read More »

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் பலி !

சிலாபம் வலகும்புர பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர்.டிப்பர் ரக வாகனத்துடன் மகிழூர்த்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் மகிழுந்தில் பயணித்தவர்களே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வரும் நிலையில் உயிரிழந்தவர்கள் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Read More »

ராஜமலை பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன இரண்டு பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டதை அடுத்து, பலியானோரின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி தேயிலை தோட்டத்தில் கனமழையால் கடந்த 6ஆம் திகதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70 பேர் காணாமல் போயினர். நேற்று முன்தினம் மீட்கப்பட்ட மூன்று உடல்களுடன் சேர்த்து 61 பேரின் உடல்கள் …

Read More »

தமிழகத்தின் 2-வது தலைநகரை அறிவிப்பது தொடர்பாக ஆளும் அதிமுக அமைச்சர்களிடையே மோதல் நிலை

தமிழகத்தின் 2-வது தலைநகரை அறிவிப்பது தொடர்பாக, ஆளும் அதிமுக அமைச்சர்களிடையே மோதல் நிலை தோன்றியுள்ளது. தமிழகத்தின் 2-வது தலைநகராக மதுரையை மாற்ற வேண்டும் என்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில், திருச்சியில் நேற்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அளித்த பேட்டியில், திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் கனவு என்றும், அதனையே நிறைவேற்ற …

Read More »