Tuesday , September 29 2020
Breaking News

இலங்கை

மூவருக்கு அறிவித்தல் விடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை ஆகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read More »

அரிசியின் விலை அதிகரிப்பு.

சந்தையில் அரிசியின் விலை 100 ரூபாயாக அதிகரித்துள்ளது. அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் பீ.கே.ரஞ்சித் இதனை தெரிவித்தார். அத்துடன் சம்பா அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

Read More »

பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகியோரின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக CID நீதிமன்றத்துக்கு அறிவிப்பு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தடுக்க தவறிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.  

Read More »

தீ பற்றி எரியும் நீதிமன்றம்.

கொழும்பு மேல்மாகாண மேன் முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தின் மேல் மாடியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்ட குளிரூட்டியில் இருந்த மின் கசிவே தீ பரவலுக்கு காரணமென எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீயணைப்பு வீரர்கள் முன்னெடுத்து உள்ளனர். குறித்த விபத்து எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

Read More »

சலுகைவிலையில் தேங்காய்.

கொழும்பு உட்பட ஏனைய சில பகுதிகளில் இன்று முதல், பாரவூர்திகளின் மூலம் சலுகை முறையில் தேங்காயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக பெருந்தோட்ட துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 60 ரூபாய் என்ற சலுகை விலையில், நாடளவு ரீதியில் தேங்காயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தெங்கு உற்பத்தி சபையானது, மேலும் சில நிறுவனகளுடன் இணைந்து இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் திடீர் தீவிபத்து.

வெள்ளவாய நகரில் எல்ல பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்புவதற்கு வந்த முற்சக்கர வண்டியே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாக்கியது. இதன்போது எரிபொருள் நிலையத்தில் கடமையாற்றிய இளைஞர்களே தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

Read More »

கொரோனா காரணமாக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு பூட்டு.

கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு இரண்டு வாரங்கள் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தில் ஊழியம் ஒருவருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டதை தொடர்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நாட்டில் நேற்றய தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 14 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து நாட்டில் …

Read More »

இன்றய காலநிலை தொடர்பான விபரங்கள்.

சப்ரகமுவ, மேல், மத்திய, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழையுடனான காலநிலை நிலவக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் ஊவா மாகாணத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னரும் நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,திருகோணமலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் …

Read More »

இரத்தினக்கல் மற்றும் ஸ்வர்ண ஆபரணங்கள் அதிகார சபையின் கட்டிடத்தின் சுவரில் பிளவு.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இரத்தினக்கல் மற்றும் ஸ்வர்ண ஆபரணங்கள் அதிகார சபையின் ஊழியர்கள் இன்று மதியம் அதிகார சபையின் கட்டிடத்திலிருந்து வெளியேறினர். குறித்த கட்டிடத்தின் சுவரில் வெடிப்புக்கள் காணப்படுவதாகவும் தாழிறங்கும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்து கட்டிடத்திலிருந்து வெளியேறினர். குறித்த அதிகார சபைக்கு அருகில் புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதால் இவ்வாறு வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read More »

சற்று முன்னர் மேலும் 13 பேருக்கு கொரோனா.

Covid – 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3312 ஆக அதிகரித்துள்ளது. கந்தகாடு முகாமில் ஒருவருக்கும், குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த ஒருவருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 07 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த 02 பேருக்கும், இந்தியாவில் …

Read More »