Monday , September 28 2020
Breaking News

இலங்கை

காஷ்மீர் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொள்வதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு அறிவிப்பு

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொள்வதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை கடந்த ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதி இந்திய மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக …

Read More »

20 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனைகளைத் தயாரிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்று நியமிப்பு

20 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனைகளைத் தயாரிப்பதற்காக, ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை ஒழித்து விட்டு, 20 ஆவது திருத்தத்தைக் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்போதே, 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கான யோசனைகள் அடங்கிய வரைவை தயாரிப்பதற்கு ஐந்து …

Read More »

நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்

கிளிநொச்சி – கனகபுரம் டிப்போ வீதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். புதுமுறிப்பு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த மூன்று இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளனர். டிப்போ- கனகபுரம் வீதியில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியின் வீதி வளைவில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 18 …

Read More »

19 அவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு 20 ஆவது திருத்தச்சட்டத்த கொண்டு வர அமைச்சரவையில் முடிவு

தகவல் உரிமைச் சட்டம், ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த 19 ஆவது திருத்தச்சட்டத்தின் சாதகமான விடயங்களில் மாற்றங்களைச் செய்வதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. புதிதாக பதவிக்கு வந்துள்ள அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றிருந்த்து. இந்தக் கூட்டத்தில், 19 அவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு, 20 ஆவது திருத்தச்சட்டத்த கொண்டு வருவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு திருத்த வரைவைத் …

Read More »

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவிக்கப்படவில்லை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பில் இருந்து கிடைத்த புலனாய்வுத் தகவல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக நேற்று சாட்சியம் அளித்த போது அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அரச …

Read More »

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்த்தனவை தெரிவு செய்ய தீர்மானம்

ஒன்பதாவது நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில், புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக, மகிந்த யாப்பா அபேவர்த்தனவை தெரிவு செய்வதற்கு ஆளும்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் முன்மொழியப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் பதவிக்கு மகிந்த யாப்பா அபேவர்த்தனவின் பெயரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்மொழிந்துள்ளார். அதேவேளை பிரதி …

Read More »

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. நிலையியல் கட்டளைகளின் படி முதலில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும். அதனையடுத்து, கடந்த 5ஆம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் முன்னிலையில், பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து, பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தலைவர் ஆகியோர் தெரிவு செய்யப்படுவார்கள். இதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும் …

Read More »

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் செயற்படும்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் செயற்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்திய நிறுவனமும், உள்ளூர் நிறுவனமும் இணைந்து கட்டியுள்ளன. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மன்னார் காற்றாலை மின் திட்டத்தின் மூலம் அடுத்த மாதம், மின்உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை …

Read More »

இரண்டு உறுப்பினர்களின் ஆசனங்கள் வெறுமையான நிலையில் கன்னி அமர்வு

ஒன்பதாவது நாடாளுமன்றம் நாளை முதல்முறையாக கூட்டப்படவுள்ள நிலையில், முதல் அமர்வில், இரண்டு உறுப்பினர்களின் ஆசனங்கள் வெறுமையாகவே இருக்கும் என்று நாடாளுன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அபு ஜனபல கட்சி ஆகியவற்றுக்கு கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்குரிய உறுப்பினர்கள் குறித்த விபரங்கள் இன்னமும் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை. இதனால், குறித்த இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்குமாறு ஆசனங்கள வெறுமையாகவே இருக்கும் …

Read More »

நாடு முழுவதும் இரண்டு மணித்தியாலம் 45 நிமிடங்களுக்கு மின்தடை

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை அடுத்து, நாடு முழுவதும், இரண்டு மணித்தியாலம் 45 நிமிடங்களுக்கு மின்தடை அமுல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுதல் அமுலுக்கு வந்துள்ள இந்த மின்தடை நான்கு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வார நாட்களில் பகலில், 1 மணித்தியாலம் 45 நிமிடங்களும், இரவில் மணித்தியாலமும், இந்த மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த மின்தடை, நாடு முழவதும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு அமுல்படுத்தப்படும் என்றும் …

Read More »