Wednesday , September 30 2020
Breaking News

இலங்கை

சஹ்ரான் காசிம்க்கு இந்தியா புகலிடமாக இருந்தது

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் காசிம் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு இந்தியா ஒரு பாதுகாப்பான புகலிடமாக இருந்தது என்று, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் சஹ்ரானும் அவரது உதவியாளர்களும் பலமுறை இந்தியாவுக்குச் சென்று அங்கு தங்கியிருந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுள்ளது பற்றிய தகவல்கள் …

Read More »

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல இந்தியா தயார்

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்காக இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் மிகவும் நெருங்கிச் செயற்படத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தனவை, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றுக்காலை 11 மணியளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார். இதன்போதே, இந்தியாவின் அண்மைய நாட்டிற்கு முன்னுரிமை கொள்கையின் கீழ் இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை …

Read More »

கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா தயார்

கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதற்கு ரஷ்யா முன்வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமில் புடின் கடந்தவாரம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இலங்கையின புதிய வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நேற்று சந்தித்துப் பேசிய ரஷ்ய தூதுவர் யூரி பி மட்டேரி, தமது நாடு கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். தடுப்பூசி பெறுவதற்கு ஆர்வம் …

Read More »

பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து வாழ்த்துக் கூறிய அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ்

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், நேற்று மாலை முதல் முறையாக பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து வாழ்த்துக் கூறியுள்ளார் அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ். இந்தச் சந்திப்பின் போது, பொருளாதாரம், வர்த்தகம், அரசாட்சி, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில், இலங்கையுடன் மேலும் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள அமெரிக்க விரும்புவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும் இடம்பெற்றுள்ளதை வரவேற்றுள்ள …

Read More »

எல்லா நாடுகளும் நட்புறவைப் பேணுகின்ற கொள்கையை இலங்கை பின்பற்றும் – தினேஸ் குணவர்த்தன

எல்லா நாடுகளும் நட்புறவைப் பேணுகின்ற கொள்கையை இலங்கை பின்பற்றும் என்று வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னரே, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா கல்யாண மித்ரவாகவே இருக்கும். மகிழ்ச்சியிலும் துன்பத்திலும், அணிசேராத, நடுநிலையான நட்புறவை பேணுவதே இலங்கையின் வெளியுறவுக் கொள்கையாக இருக்கும். எங்களுக்கு எதிரிகள் இல்லை. நண்பர்களே உள்ளனர். உலகம் முழுவதும், இலங்கை அடைந்துள்ள மதிப்பை …

Read More »

இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் – வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே

இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். நேற்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கடமைகளைப் பொறுப்பேற்ற நிகழ்வில் உரையாற்றிய பொதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “எமது வெளியுறவுக் கொள்கையில் வெவ்வேறு வழிகளை பின்பற்றியுள்ளோம். காலப்போக்கில் அது மாறிவிட்டது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை 2019 காலகட்டத்திற்கு நெருக்கமாக எவ்வாறு கையாளப்பட்டது என்பதை நாம் அறிவோம். இப்போது எமது வெளியுறவுக் …

Read More »

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் – ரெலோ

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி, தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோருவதற்கு, பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டம் நேற்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திலேயே , கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை தருமாறு கோருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ரெலோவுக்கு 3 ஆசனங்களை கிடைத்துள்ளன. தமிழ்த் தேசியக் …

Read More »

நேற்று இலங்கையை இருளில் தள்ளிய மின்தடை – விசாரணைக்கு உத்தரவு

நாடு முழுவதும் நேற்று ஏற்பட்ட திடீர் மின்தடை குறித்து விசாரிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சக்தி மின் மற்றும் சக்தி டலஸ் அலகப் பெரும தெரிவித்துள்ளார். கரவலப்பிட்டியவில் உள்ள மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நேற்று நண்பகல் தொடக்கம் இரவு வரை நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. நேற்று மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்ட இந்த மின்சாரத் தடையினால், நாடு பெரும் பாலும் முடங்கிப் போனதுடன், பொதுமக்கள் பெரும் …

Read More »

கடந்த வாரத்தில் செயற்பட்ட ஒழுங்குமுறைக்கு அமையவே, இன்று முதல் பாடசாலைகள் செயற்படும் – கல்வி அமைச்சு

அனைத்து பாடசாலைகளும் கடந்த வாரத்தில் செயற்பட்ட ஒழுங்குமுறைக்கு அமையவே, இன்று முதல் செயற்படும் என்று கல்வி அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டும் செய்திகள் கூறுகின்றன. 200 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில், தரம், 11, தரம் 12, தரம் 13 தவிர ஏனைய மாணவர்களுக்கு சுழற்றி அடிப்படையிலேயே வகுப்புகளை நடத்த கல்வி அமைச்சு உத்தரவிட்டிருந்த்து. இதற்கமைய கல்வி அமைச்சினால் வகுப்பு ரீதியாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒழுங்குமுறை ஒன்றும், …

Read More »

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியீடு

50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் விபரங்கள் இன்று அதிகாலையில் ஜனதிபதி செயலகத்தின் இணைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட மற்றும் பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்த திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்காக நிலுவையில் உள்ளவர்களின் பட்டிலும் மாவட்ட ரீதியாக தனியாக வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த வேலைவாய்ப்புத் …

Read More »