Tuesday , September 29 2020
Breaking News

இலங்கை

வடக்கில் பிரிவினைவாதமோ, கிழக்கில் தீவிரவாதமோ தலைதூக்க இடமளிக்கமாட்டோம் – பாதுகாப்புச் செயலாளர் வாக்குறுதி.

வடக்கில் பிரிவினைவாதமோ, கிழக்கில் தீவிரவாதமோ, நாட்டில் அச்சத்தையும் அழிவையும் ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொவிட் -19 க்கு பின்னரான மறுமலர்ச்சி – இலங்கையின் தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி” எனும் தொனிப்பொருளில் “ஹரிமக அமைப்பினால்” இலங்கை மன்றக் கல்லூரியில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த வாரத்திலும், 1.5 கிலோ உயர் ரக வெடிபொருட்கள் …

Read More »

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் ரயில் பாதையைக் கடக்க முயன்றவர் ரயிலுடன் மோதி படுகாயம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில், அலைபேசியில் உரையாடிக் கொண்டு ரயில் பாதையைக் கடக்க முயன்றவர் ரயில் மோதி படுகாயமடைந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி, சங்கத்தானை ரயில்வே கடவையில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சங்கத்தானை பகுதியில் அலைபேசியில் உரையாடிக் கொண்டு, தண்டவாளத்தைக் கடந்து செல்ல முற்பட்டவர் மீது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் மோதியுள்ளது. கீழே விழுந்த அவர், தண்டவாளத்திலிருந்து வெளியேற முயன்ற போது அவரது …

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக சுயாதீனமான குழு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக, சுயாதீனமான குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன திருகோணமலையில் நேற்று நடந்த தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில், தேர்தலில் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், குறிப்பாக தமிழ் அரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்டவை குறித்து, கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போதே, உள்ளக மட்டத்தில் இதுபற்றி ஆராய்வது, கலந்துரையாடுவதை விட, சுயாதீன குழுவொன்றை நியமித்து, …

Read More »

யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னாள் போராளிகள் பற்றிய விபரங்களைச் சேகரிக்கும் இராணுவத்தினர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் உள்ள சில இடங்களில், வீடுகளுக்குச் சென்று இராணுவத்தினர் முன்னாள் போராளிகள் பற்றிய விபரங்களைச் சேகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர், வீடுகளில் இருந்த அனைவரது விபரங்களையும் பதிவு செய்துள்ளனர் என்று குடியிருப்பாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் எவரேனும், இருக்கின்றனரா என்ற விபரங்களையும் இராணுவத்தினர் சேகரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் …

Read More »

கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தின் திருக்குறள் மாநாடு திருவள்ளுர் விழா

கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தின் திருக்குறள் மாநாடு திருவள்ளுர் விழா மற்றும் பரிசில்; வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றுள்;ளன. கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் திருக்குறள் மாநாடு திருவள்ளுவர் விழா மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வுகள் என்பன நேற்றுஆரம்பமாகி இன்று வரைஇரண்டு நாட்கள்நடைபெற்றுள்ளன. கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுசபை மண்டபத்தில் இறுதிநாளாகிய இன்று (16-08-2020) நறைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்சங்க நிர்வாகனத்தினர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப்பலர் கலந்துn காண்டனர்.

Read More »

அரசாங்கத்தை எதிர்த்து செயற்படுவதற்கு நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் இருப்பையும் உடைத்தெறிய நினைக்கும் நாட்டின் தற்போதை அரசாங்கத்தை எதிர்த்து செயற்படுவதற்கு நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று,ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். 13,19 ஆவது திருத்தச் சட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் வடக்கு மாகாண சபைக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் கிடைக்கும் என்று எவரும் கனவு காணக் கூடாது என்றும் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் றியர் அட்மிரல் சரத் …

Read More »

பாதுகாப்பு அமைச்சு தொடர்பாக எந்த தகவலும் வர்த்தமானி அறிவித்தலில் இல்லை

அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், பாதுகாப்பு அமைச்சு தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அமைச்சரவை பதவியேற்பின் போது, பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு பொறுப்பாக அமைச்சுக்கள் தொடர்பான ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜயசுந்தர வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். …

Read More »

இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகளின் போர்க்குற்றங்கள் – முழு விசாரணை நடத்துமாறு ஐ.நா

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையில் பங்கேற்ற பிரித்தானிய கூலிப்படைகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணைகள் நடத்த வேண்டும் என்று ஐ.நாவின் ஆறு நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1984 தொடக்கம் 1988 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிரித்தானியாவின் தனியார் இராணுவ நிறுவனமான கீனி மீனி கூலிப்படைகள், இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளித்ததுடன், போர் நடவடிக்கைகளிலும் பங்கேற்றிருந்தனர். இந்தக் காலகட்டத்தில், இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு கீனி மீனி கூலிப்படைகள் தண்டிக்கப்பட …

Read More »

வடபகுதியில் இளைஞர்களையும் எதிர்கால சமுதாயத்தையும் அழிக்கும் போதைப் பொருள் பாவனை

போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்கள் பகுதிகளில் இருக்கின்ற இளைஞர்களை புதிதாக பாவனைக்கு உட்படுத்துவதன் மூலம் அவர்களை அடிமையாக்கி பின்னாளில் அவர்கள் தொடர்ந்தும் போதைப்பொருளை வாங்கும் வாடிக்கையாளராக மாற்றுகிறார்கள்.பெற்றோர்களின் தொடர் கண்காணிப்பும் கவனமும் தேவை பிற இடம் ஒன்றிற்கு புதிதாக செல்லுகின்ற போது அங்கே ஏற்படுகின்ற திடீர் நட்பின் நிமிர்த்தம் போதைப்பொருளை பாவிக்கும் நிலை ஏற்படுகின்றது. ஒரு தடவை பாவித்ததன் விளைவாக அவர்கள் தொடர்ச்சியாக பாவிக்கும் நிலை ஏற்படுத்தப்படுகின்றது.புதிய இடம் ஒன்றிற்கு வேலைக்காக …

Read More »

துறைசார் நிபுணர்கள் அமைப்பான வியத்மகவைச் சேர்ந்த நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட துறைசார் நிபுணர்கள் அமைப்பான வியத்மகவைச் சேர்ந்த நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று நடந்த அமைச்சர்கள் நியமனத்தின் போதே, வியத்மக அமைப்பின் உறுப்பினர்கள் நான்கு பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், வியத்தம அமைப்பின் ஒன்பது உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் பட்டியலில் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் எட்டுப் பேர், இம்முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், றியர் …

Read More »