Tuesday , September 29 2020
Breaking News

இலங்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு பேராசிரியர்கள் பெயர்கள் பரிந்துரை

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு, பேராசிரியர்கள் சிறிசற்குணராஜா, மிகுந்தன், வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில், திறமை மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில், முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளவர்கள் ஜனாதிபதியின் தெரிவுக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தீர்மானிப்பதற்கான யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம், நேற்று நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து …

Read More »

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருப்பதற்கு எந்த தடைகளும் இல்லை – சட்டத்தரணி மனோகர டி சில்வா

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருப்பதற்கு சட்ட ரீதியான எந்த தடைகளும் இல்லை என்று அரசியலமைப்பு விவகார நிபுணராக சட்டத்தரணி மனோகர டி சில்வா தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் உள்ள நிலையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கு அமைய அவர் இந்தப் பதவியை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருந்தன. எனினும் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அரசியலமைப்பு விவகார நிபுணராக …

Read More »

தேசிய பட்டியல் விவகாரத்தால், ஐக்கிய மக்கள் சக்தியை உடைக்க விரும்பவில்லை – மனோ கணேசன்

தேசிய பட்டியல் விவகாரத்தால், ஐக்கிய மக்கள் சக்தியை உடைக்க விரும்பவில்லை என்றும், இது தொடர்பாக சஜித் பிரேமதாச எடுக்கும் தீர்மானத்துக்கு இணங்குவதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு கருத்து வெளியிட்ட மனோ கணேசன், “ஐக்கிய மக்கள் சக்தியை நாமே உருவாக்கினோம். அந்தக் கூட்டணியோடு நாம் நீண்டத் தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. …

Read More »

அமைச்சரவையில் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகம் – சர்வதேச ஊடகங்கள்

இலங்கையின் புதிய அமைச்சரவை நேற்றுப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இதுகுறித்து செய்திகளை வெளியிட்டுள்ள சர்வதேச ஊடகங்கள், அமைச்சரவையில் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகமாகியிருப்பதாக தெரிவித்துள்ளன. கண்டியில் நேற்று நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு தொடர்பாக ஏபி, ஏஎவ்பி, ரொய்ட்டர்ஸ், பிபிசி, பிரிஐ போன்ற பல செய்தி நிறுவனங்களும், உலகின் முன்னணி ஊடகங்கள் பலவும், முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன. அமைச்சரவையில் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகம் இருப்பது குறித்தே சர்வதேச ஊடகங்கள் …

Read More »

பொதுவாக்கெடுப்பு குறித்த நிலைப்பாடு என்ன? – விக்னேஸ்வரன் கேள்வி

இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு நடத்துவது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கேள்வி- பதில் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார். கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதற்கு தயார் என்று கூறியதாக செல்வம் அடைக்கலநாதன் கூறியிருப்பதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறதே. அது உண்மையா …

Read More »

தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்திக்கு பொதுத் தேர்தலில் கிடைத்த 7 ஆசனங்களை நிரப்புவதில் பங்காளிக் கட்சிகளுடன் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளில் கணிசமானவை தமிழ், முஸ்லிம் கட்சிகளால் கிடைத்தவை. எனினும், தேசியப் பட்டியலில் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, தமிழ், முஸ்லிம் …

Read More »

அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கான உறுப்பினர் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில்லை

அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கான உறுப்பினர் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தலில் அபே ஜன பல கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கைப்பற்றுவதில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் அதுரலியே ரத்தன தேரருக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் அபே ஜன பல கட்சியின் பொதுச் செயலாளர் என்று கூறி, வெடினிகம …

Read More »

ரெலோ அமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனித்து செயற்படவுள்ளதாக வரும் செய்திகளை தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நிராகரித்துள்ளார்.

ரெலோ அமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனித்து செயற்படவுள்ளதாக வெளியாகி வரும் செய்திகளை, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நிராகரித்துள்ளார். இது குறித்து செல்வம் அடைக்கலநாதன் கருத்து வெளியிடுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம் தமது சம்மதம் இன்றி வழங்கப்பட்டுள்ளது எனது உண்மையே என்றாலும்,  அதற்காக கூட்டமைப்பை பிளவுபடுத்த காரணமாக இருக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தம்மை பகடையாக வைத்து, தமிழ் அரசுக் …

Read More »

எக்காரணம் கொண்டும் இலங்கை இராணுவத்தை சர்வதேச அரங்கில் தண்டிக்க அனுமதிக்க மாட்டோம் – றியர் அட்மிரல் சரத் வீரசேகர

எக்காரணம் கொண்டும் இலங்கை இராணுவத்தை சர்வதேச அரங்கில் தண்டிக்க அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைத்துள்ளார், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள றியர் அட்மிரல் சரத் வீரசேகர. இறுதிப் போரில், நாம் செய்யாத குற்றமொன்றை செய்ததாக கூறி, முன்னைய ஆட்சியாளர்கள்  ஜெனிவாவில் பொய்யான சாட்சியங்களை கொடுத்தனர் என்று குற்றம்சாட்டிய அவர், அதனை தம்மால் ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜெனிவா பிரேரணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற …

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டிய தேவை இல்லை – அமைச்சர் தினேஷ் குணவர்தன

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை என்றும், தங்களுடன்  இணைந்துள்ள தமிழ்ப் பிரதிநிதிகளுடனேயே அது குறித்து பேசுவோம் என்றும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்று கூறிக்கொண்டு பிரிவினைவாதம் பேசிக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைத் தமிழ் மக்களே நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார். …

Read More »