Monday , September 28 2020
Breaking News

இலங்கை

ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டத்தில் இலங்கை நிலை குறித்து மீளாய்வு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் 130 ஆவது அமர்வில் இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளின் நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்யப்படவுள்ளதாக,  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் வரும், ஒக்ரோபர் 12ஆம் திகதி தொடக்கம், நொவம்பர் 6ஆம் திகதி வரை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் 130 ஆவது அமர்வு இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரிலேயே இலங்கை மற்றும் 11 நாடுகளின் நிலைமைகள் குறித்து மீளாய்வு …

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தப் பேச்சும் இல்லை – பசில், தினேஸ் திட்டவட்டமாக அறிவிப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்றும், அவர்களின் நிபந்தனைகளை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியஅமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் அரசியல் விவாத நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டி உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று கூறியுள்ள பசில் ராஜபக்ச, அவர்களுடன் பேச்சு நடத்த வேண்டிய …

Read More »

பாதுகாப்பு அமைச்சின் கீழ் மாவட்ட, பிரதேச செயலகங்கள் – இராணுவத்தின் வசமாகிறது சிவில் நிர்வாகம்

பொது நிர்வாக அமைச்சை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதன் மூலம், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள், பாதுகாப்பு அமைச்சின் வசமாகும் நிலை உருவாகியுள்ளது. இது நாட்டின் நிர்வாகத்தை இராணுவத்திடம் தாரைவார்ப்பதற்கு சமமானது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார். நாடு இராணுவ மயப்படுத்தப்படுவதாக முன்னர் தாங்கள் கூறியபோது அதனை அரசாங்கமும்,  அரசுடன் இணைந்த கட்சிகளும் நிராகரித்திருந்தன என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் …

Read More »

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது – கண்டியில் பறக்கும் தனி சிங்கக் கொடி

புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இன்று காலை கண்டியில் நடைபெறவுள்ள நிலையில், கண்டி நகரில் தனி சிங்களபௌத்த மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கொடிகளால் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர், முதலாவது அமைச்சரவையை இன்று அமைக்கவுள்ளது. ஏற்கனவே பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ள நிலையில், இன்று காலை கண்டியில் உள்ள தலதா மாளிகையின் மண்டபத்தில் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்கான …

Read More »

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் தொடர்பான விபரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிட்டுள்ளார். இதன்படி, நாளை பதவியேற்கவுள்ள புதிய அமைச்சரவையில், 28 அமைச்சுக்கள் இருக்கும் என்றும் இவற்றுக்கு மேலதிகமாக, 40 இராஜாங்க அமைச்சுக்கள் இருக்கும் என்றும் ஜனாதிபதி செயலக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 பேர் கொண்ட அமைச்சரவைக்குள்ளேயே, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இருக்கும் அமைச்சுக்களும் உள்ளடக்கப்படும் என்றும் ஜனாதிபதி …

Read More »

தமிழ் கட்சிகள் ஒன்றிணையா விட்டாலும், ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சித்தார்த்தன்

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், தமிழ் கட்சிகள் ஒன்றிணையா விட்டாலும், ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் என்று, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார். சுன்னாகத்தில், உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களை கடும் நெருக்கடியான சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்று குறிப்பிட்ட சித்தார்த்தன், இவ்வாறான நிலையில் கஜேந்திரகுமார் அணியும் விக்னேஸ்வரன் அணியும் …

Read More »

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கனடிய குடியுரிமையை துறந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் கலாநிதி சுரேன் ராகவனின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிவில் செயற்பாட்டாளர் ஒருவரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த்து. கனடா மற்றும் இலங்கை குடியுரிமைகளைக் கொண்ட அவர் நாடாளுமன்றம் செல்ல முடியாது …

Read More »

சிறையில் உள்ள பிள்ளையானும் அமைச்சராகிறார் நாளை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நாளை கண்டியில் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வில் அவரை பங்கேற்கு அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அவருக்கு அமைச்சர் பதவியா அல்லது இராஜாங்க அமைச்சர் பதவியா வழங்கப்படவுள்ளது என்பது குறித்து …

Read More »

யாழில் ஏனைய கட்சிகள் ஆசனம் பெற்றது ஆபத்து – சுரேஷ் பிறேமச்சந்திரன்

சிறிலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளதும், அரச பங்காளிக் கட்சிகள், வடக்கு கிழக்கில் பல ஆசனங்களை பெற்றுள்ளதும், தீர்வு நோக்கிய எமது போராட்டத்தை மிகவும் பலவீனப்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது என்று, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணை பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும், “60 ஆண்டு …

Read More »

கலையரசனுக்கு கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தவராசா கலையரசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் 29 தேசியப் பட்டியல் ஆசனங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்கமைய, சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த 17 தேசியப் பட்டியல் ஆசனங்களுக்குரிய நியமனங்களை உறுதிப்படுத்தி அந்தக் கட்சி பட்டியல் ஒன்றை சமர்ப்பித்திருந்த்து. மேலும் இலங்கை தமிழ் …

Read More »