Monday , September 28 2020
Breaking News

இலங்கை

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு இலங்கைக்கு பாராட்டு.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் இலங்கையில் பொதுத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளமை குறித்து அமெரிக்கா, ஜப்பான், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று சவாலுக்கு மத்தியில், மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடித்தமைக்கு இலங்கைக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், புதிய நாடாளுமன்றத்தில் அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு, செயல்திறன் மிக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், மனித உரிமைகள் மற்றும் …

Read More »

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர்களே அதிகபட்ச விருப்பு வாக்குகளுடன் தெரிவு

நேற்று முன்தினம் நடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு, கம்பகா மாவட்டங்களில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர்களே அதிகபட்ச விருப்பு வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் கடற்படை அதிகாரியும், வியத்மக அமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான றியர் அட்மிரல் சரத் வீரசேகர 328,092  வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரையடுத்து, கடும்போக்காளர்களான விமல் வீரசன்ச 267, 084 வாக்குகளையும், உதய …

Read More »

புதிய நாடாளுமன்றத்தில் தந்தையும் மகனும் என பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய நாடாளுமன்றத்தில் தந்தையும் மகனும் என பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பொதுஜன பெரமுனவின் சார்பிலேயே தேர்தலில் போட்டியிட்டு இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குருநாகல மாவட்டத்தில் இருந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து அவரது மகன் நாமல் ராஜபக்சவும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து சமல் ராஜபக்சவும், அவரது மகன் ஷசீந்திர ராஜபக்ச மொனராகல மாவட்டத்தில் இருந்தும் நாடாளுமன்றம் செல்கின்றனர். மாத்தளை …

Read More »

அதிகபட்ச விருப்பு வாக்குகளைப் பெற்ற பிரதமர் வேட்பாளர் என்று  ரணில் விக்ரமசிங்க படைத்திருந்த சாதனையை பிரதமர் மகிந்த ராஜபக்ச முறியடித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் அதிகபட்ச விருப்பு வாக்குகளைப் பெற்ற பிரதமர் வேட்பாளர் என்று  ரணில் விக்ரமசிங்க படைத்திருந்த சாதனையை பிரதமர் மகிந்த ராஜபக்ச முறியடித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தில், போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவுக்கு இம்முறை 527,364 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த 2015 பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க கொழும்பு மாவட்டத்தில், 500,566 விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்திருந்தார். அவரது அந்தச் சாதனையை முறியடித்து மகிந்த ராஜபக்ச 527,364 விருப்பு …

Read More »

புதிய நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 8 ஆக வீழ்ச்சி

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 196 உறுப்பினர்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 8 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நேற்று முன்தினம் நடந்த பொதுத் தேர்தலில் 8 பெண் உறுப்பினர்கள் மாத்திரம் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இரத்திரபுரி மாவட்டத்தில் இருந்து பொதுஜன பெரமுன சார்பில் மாத்திரம், பவித்ரா வன்னியாராச்சி, முடித்த சொய்சா, ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தலதா அத்துகோரளவுமாக, மூன்று பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கேகாலை …

Read More »

நாடாளுமன்றத்துக்கு 25 தமிழ்ப் பிரதிநிதிகள் நேரடியாகத் தெரிவு – தேசியப் பட்டியலிலும் குறைந்தது 2 பேருக்கு வாய்ப்பு.

நேற்று முன்தினம் நடந்த பொதுத் தேர்தலில் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில், 9 பேரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 7 பேரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் 2 பேரும்,  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் 2 பேரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஒருவரும், தமிழ் மக்கள் …

Read More »

களனி ரஜமகா விகாரையில் நாளை மறுநாள் பிரதமராகப் பதவியேற்கிறார் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் தற்போதைய பிரதமருமான, மகிந்த ராஜபக்ச, நாளை மறுநாள்  பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள  நிலையிலேயே, பிரதமர் மகிந்த ராஜபக்ச  நாளை மறுநாள், ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு களனி ராஜமஹா விகாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்பாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். அதேவேளை, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை  25 முதல் 28 ஆக …

Read More »

பொதுத் தேர்தலை ஒரு ஜனநாயக தேர்தலாக தான் கருதவில்லை – இரா.சம்பந்தன்.

இம்முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலை ஒரு ஜனநாயக தேர்தலாக தான் கருதவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் உள்ள தமது இல்லத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பில்  கருத்து வெளியிட்ட போதே,  இரா.சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார். இம்முறை இடம்பெற்ற தேர்தலை ஒரு ஜனநாயக தேர்தலாக நான் கருதவில்லை. மக்களுக்கு பணம் வழங்கி நன்கொடை கொடுத்து மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்று …

Read More »

நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார், விக்னேஸ்வரனுடன் இணைந்து செயற்படத் தயார் – சுமந்திரன் அறிவிப்பு.

பொதுத் தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர்கள் தம்முடன் இணைந்து செயற்படவில்லையெனில், நாடாளுமன்றத்தில், தாங்கள் அவர்களுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், கட்சி மீதான நம்பிக்கை …

Read More »

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் அனைவரும் படுதோல்வியடைந்துள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் அனைவரும் படுதோல்வியடைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு இம்முறை நேரடியாக எந்த ஆசனங்களும் கிடைக்கவில்லை. தேசியப்பட்டியல் மூலம் ஒரு அசனம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் ரணில் விக்ரசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசமும் தோல்வியடைந்துள்ளார். நுவரெலிய மாவட்டத்தில் நவீன் திசநாயக்கவும், கம்பகா …

Read More »