Saturday , September 26 2020
Breaking News

இலங்கை

அம்பாறை மாவட்டத்தில், தமிழ்ப் பிரதிநிதிகள் எவரும் தெரிவாகவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில், சிறிலங்கா பொதுஜன பெரமுன 3 ஆசனங்களுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தமிழ்ப் பிரதிநிதிகள் எவரும் தெரிவாகவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. அம்பாறை தேர்தல் மாவட்டத்துக்கான இறுதி முடிவுகளின் அடிப்படையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன 126,012 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன்படி, அந்தக் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி 102,274      வாக்குகளுடன் 2 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 43,319 வாக்குகளுடன் ஒரு …

Read More »

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி  இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி  இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. திருகோணலை மாவட்டத்துக்கான இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள்‌ சக்தி  86,394 வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், இரண்டு ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு  68,681 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சி …

Read More »

மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களை இம்முறை இழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களை இம்முறை இழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மட்டக்களப்பு மாவட்ட இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இலங்கை தமிழரசு கட்சிக்கு 79, 460 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம், இரண்டு ஆசனங்களை பெற்றுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 67,692 வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  34,428 வாக்குகளுடன் ஒரு …

Read More »

தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 3 ஆசனங்கள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி தேர்தல் மாவட்டத்தில், தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 3 ஆசனங்கள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தில், இலங்கை தமிழரசு கட்சி  69916 வாக்குகளைப் பெற்றிருந்தது. இதன் அடிப்படையில், தமிழரசுக் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்துள்ளன. கடந்த முறை 4 ஆசனங்களை வென்றிருந்த தமிழரசுக் கட்சி அங்கு இம்முறை ஒரு ஆசனத்தை இழந்துள்ளது. வன்னி மாவட்டத்தில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 42,524 வாக்குகளைப் …

Read More »

யாழ்ப்பாணத்தில் விருப்பு வாக்குகளில் அங்கஜன் முதலிடத்தில் இருப்பதாக தகவல்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களின் பட்டியலில், 36,300 வாக்குகளுடன்  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அங்கஜன் ராமநாதன் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. இரண்டாவது இடத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளான  சிறிதரன் சிவஞானம் 35, 884 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். 32, 156 வாக்குகளுடன் டக்ளஸ் தேவானந்தாவும்,  31, 658 வாக்குகளுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், 27, 734 வாக்குகளுடன் எம்,ஏ. சுமந்திரனும்,  23, 740  வாக்குகளுடன் …

Read More »

விருப்பு வாக்கு விவகாரத்தினால் யாழ். மாவட்ட செயலகத்தில் நள்ளிரவில் குழப்பம் – சசிகலா ரவிராஜ் அழுது கொண்டு வெளியேறினார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து, நள்ளிரவுக்குப் பின்னர், குழப்ப நிலை ஏற்பட்டதுடன், அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் மீது பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று ஆசனங்களே கிடைத்திருந்தன. இதில், அதிகளவு விருப்புவாக்குகளை சிறிதரன் பெற்றிருந்தார். இதையடுத்து, அடுத்த நிலையில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றது யார் என்பதில், சசிகலா ரவிராஜ், …

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 10 ஆசனங்களே கிடைத்தன.

கடும் போட்டி நிலவிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களை வென்றிருப்பதுடன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிடிபி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன, தலா ஒவ்வொரு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகளுக்கு அமைய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு, 112,967   வாக்குகள் கிடைத்துள்ளன. இங்கு 31.46 வீத வாக்குகளைப் பெற்ற தமிழ் …

Read More »

பொதுத் தேர்தலில் 145 ஆசனங்களைக் கைப்பற்றி அசுர வெற்றியைப் பெற்றது பொதுஜன பெரமுன.

நேற்று முன்தினம் நடந்த பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன  145 ஆசனங்களுடன் அமோச வெற்றியைப் பெற்றுள்ளது. அனைத்து மாவட்டங்களினதும் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, ஆகிய மாவட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், திருகோணமலை மாவட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியும் கைப்பற்றியுள்ளன. ஏனைய 18 மாவட்டங்களையும் கைப்பற்றி சிறிலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு நெருக்கமாக உள்ளது. பொதுஜன பெரமுன 6,853,690வாக்குகளைப் பெற்று, நெரடியாக …

Read More »

பொதுத்தேர்தலில் வாக்களிக்கச் சென்ற இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர்.

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தலில் வாக்களிக்கச் சென்ற இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர். பெக்கேகம பாடசாலையில் வாக்களிக்கச் சென்ற 81 வயதுடைய முதியவர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து களுத்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள்ளனர். அதேவேளை, அளுத்தேபொல வலகம்ப மகாவித்தியாலயத்தில் வாக்களிக்கச் சென்ற 69 வயதுடைய பெண் ஒருவரும், வாக்களிப்பு நிலையத்தில் மயங்கி வீழ்ந்து மரணமானார் என்று …

Read More »

சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். வாக்களிப்பு முடிந்த பின்னர் நேற்று ருவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். “பொதுத் தேர்தலில் சுமார் 71 % வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். கொவிட் -19 அச்சுறுத்தல் உலகில் இருந்து நீங்காத நிலையில், பொதுமக்கள் எமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது வைத்த நம்பிக்கைக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” …

Read More »