Monday , September 28 2020
Breaking News

இலங்கை

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்குவோம் – பிரதமர் மகிந்த ராஜபக்ச

பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு ஆசனங்கள் கிடைக்காது போனாலும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்குவோம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மெதமுலான ராஜபக்ச வித்தியாலயத்தில் நேற்று வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்ட அவர், தேர்தலில் மூன்றில் இரண்டு ஆசனங்கள் கிடைக்காவிட்டாலும் நாடாளுமன்றத்தில் அதனை பெற்றுக் …

Read More »

நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15வீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15வீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியான கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.  “கல்குடா தேர்தல் தொகுதியில் 76வீதமும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 78வீதமும், பட்டிருப்புத் தொகுதியில் 73 வீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, கல்குடாவில் 89 ஆயிரத்து 210 பேரும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 864 பேரம் பட்டிருப்பில் 68 …

Read More »

பொதுத் தேர்தலில் 71 வீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு.

பொதுத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளதாகவும், நாடு முழுவதும் சராசரியாக 71 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்களிப்பு முடிந்த பின்னர் நேற்றிரவு ஊடகங்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பொதுத் தேர்தலில் 7 இலட்சம் அஞ்சல் வாக்காளர்கள் உள்ளிட்ட 11 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும், சராசரியாக 71 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலில் …

Read More »

யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 67.7% மானவர்கள் வாக்களிப்பு

யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில், 67.7% மானவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ளதாக யாழ். மாவட்ட செயலக தகவல்கள் கூறுகின்றன. கிளிநொச்சி தொகுதி நீங்கலாக, யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில், 479,584 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் அஞ்சல் வாக்காளர்கள் உள்ளிட்ட 324, 770 பேர் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். ஊர்காவற்றுறைத் தொகுதியில் 74.28 வீத வாக்காளர்களும், வட்டுக்கோட்டை தொகுதியில், 70.37 வீத வாக்காளர்களும், காங்கேசன்துறை தொகுதியில் 48.52 …

Read More »

வடக்கு, கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சி

வடக்கு, கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில், கடந்த பொதுத் தேர்தலை விட இம்முறை வாக்களிக்கு வீதம் கணிசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே கடந்த 2015 பொதுத் தேர்தலை விட, அதிகளவு வாக்குகள் இம்முறை பதிவு செய்யப்பட்டுள்ளன. திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் கிட்டத்தட்ட சம்மான நிலையிலேயே காணப்பட்டுள்ளது. எனினும் நாட்டின் பிற பகுதிகளில் வாக்களிப்பு கடுமு சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த …

Read More »

கடந்த பொதுத் தேர்தலை விட இம்முறை வடக்கு கிழக்கில் அதிகமானோர் வாக்களிப்பு

நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்திலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த பொதுத் தேர்தலை விட அதிகமானளவு வாக்களிப்பு இடம்பெறுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகள் உள்ளிட்ட 67.72 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், 61.56 வீத வாக்குகளே பதிவாகிய நிலையில் இம்முறை சுமார் 6 வீதம் வாக்களிப்பு அதிகரித்துள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தில், 2015ஆம் ஆண்டு …

Read More »

காலை 7 மணிக்கு தொடங்கியது வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கை இன்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்த பின்னர், வாக்குப்பெட்டிகள், வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டன. நாடுமுழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குகளை எண்ணும் 64 நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகள் இன்று காலை 7 மணிக்குத் திறக்கப்பட்டு, வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 7 …

Read More »

பொலன்னறுவன மாவட்டத்தில் உள்ள லங்காபுர பிரதேச செயலகத்தில் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா தொற்று.

பொலன்னறுவன மாவட்டத்தில் உள்ள லங்காபுர பிரதேச செயலகத்தில் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவரது  மகளுக்கும்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அதேவேளை, தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரியின் 5 வயது மகள் தற்போது பொலன்னறுவ மருத்துவமனையின் சிறப்பு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் குமாரவன்ச தெரிவித்துள்ளார். இதையடுத்து, பொலன்னறுவ- …

Read More »

வாக்குகளுக்கு பணம் கொடுத்தால் ஆசனத்தை இழக்க நேரிடும்- தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை.

வாக்குகளுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பதவியிழக்க நேரிடும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் பணம், புடைவைகள், மதுபானம், அரிசி போன்றவற்றை வாக்காளர்களுக்கு வழங்குவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வேட்பாளர்கள் பணம், மற்றும் பொருட்களைக் கொடுத்து வாக்குகளை வாங்குவது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டாலும், தமது …

Read More »

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகல்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து கலாநிதி தீபிகா உடகம, விலகியுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடந்த அரசியலமைப்புச் சபைக் கூட்டத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், கலாநிதி தீபிகா உடகம பதவி விலகலை, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வரை அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் நீடிக்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்று அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் …

Read More »