Monday , September 28 2020
Breaking News

இலங்கை

வன்முறைகள் நடைபெறக் கூடிய பகுதிகளுக்கு விசேட கண்காணிப்பு குழுக்களை அனுப்பியது கபே அமைப்பு.

நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வன்முறைகள் நடைபெறலாம் என்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு கண்காணிப்பாளர்களின் நிபுணர் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி, அம்பாறை, அம்பாந்தோட்டை, நாவலப்பிட்டி, ஹங்குராங்கெத்த, கரநாகல, பத்தளம் ஆகிய இடங்கள் வன்முறைகள் நடக்கக் கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். இந்த இடங்களில் கண்காணிப்பை மேற்கொள்வதற்காக, பல்கலைக்கழக கல்வியாளர்கள், …

Read More »

வாக்களிப்பு நிலையங்களுக்கு அதிகாரிகள், வாக்குச்சீட்டுகளை அனுப்பும் பணி இன்று காலை ஆரம்பம்.

நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகளை, வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. பொதுத் தேர்தல் நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், வாக்களிப்பு நிலையங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் ஏனைய தேர்தல் அதிகாரிகள் இன்று காலை முதல் தமது பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். மாவட்டங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மத்திய நிலையங்களில், வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரிகளிடம், வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் …

Read More »

வடக்கு, கிழக்கில் பொலிசாரிடம் இருந்த பாதுகாப்பு பணிகள் இராணுவத்திடம் ஒப்படைப்பு.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தலின் போது, பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்புக்கு இராணுவத்தினரின் உதவி கோரப்படும் என்று தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து விளக்கமளித்துள்ள அவர், தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 69 ஆயிரம் பொலிசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று கூறியுள்ளார். இவர்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினரும், புலனாய்வுப் பிரிவினரும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர் என்றும் பிரதி …

Read More »

யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட நான்கு நகரங்களை பலநோக்கு வர்த்தக நகரங்களாக அபிவிருத்தி செய்ய திட்டம்.

யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட நான்கு நகரங்களை பலநோக்கு வர்த்தக நகரங்களாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்று சிறிலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகியவற்றுடன் அம்பாந்தோட்டையையும், பலநோக்கு வர்த்தக நகரமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டு பிரதான துறைமுகங்கள், இரண்டு விமான நிலையங்களை இணைத்து, …

Read More »

சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.

பொலன்னறுவ – லங்காபுர பிரதேச செயலகத்தல் பணியாற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்காபுர பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இருவருக்கு சில நாட்களுக்கு முன்னதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த்து. இதையடுத்து,பிரதேச செயலக பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளின் போதே, சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலன்னறுவ மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் குமாரவன்ச தெரிவித்துள்ளார். லங்காபுர பிரதேச …

Read More »

உறுதியான தலைமைத்துவத்துக்கு ஆணை தாருங்கள் – விக்னேஸ்வரன் கோரிக்கை.

இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சலுகைகளுக்கு அடிபணியாத, ஊழலற்ற, கொள்கை பற்றுறுதிகொண்ட ஒரு அரசியல் தலைமைத்துவமே இப்போது அவசியம் என்று, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தகைய ஒரு தலைமைத்துவத்தை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அவர் நேற்று மாலை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நடந்த இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டார். உறுதியான தலைமைத்துவத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான எல்லா …

Read More »

கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்கும் – சம்பந்தன் நம்பிக்கை.

விக்னேஸ்வரனின் எதை எமக்குத் தேவையில்லை. அவரது நிலையை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களையும், வடக்கு, கிழக்கில் மொத்தமாக 20 ஆசனங்களையும் வெல்லும் என்று நம்பிக்கை வெளியிட்ட இரா.சம்பந்தன், இதன் மூலம், மீண்டும் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையைப் …

Read More »

விக்னேஸ்வரனின் எதை எமக்குத் தேவையில்லை – இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனின் எதை எமக்குத் தேவையில்லை. அவரது நிலையை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களையும், வடக்கு, கிழக்கில் மொத்தமாக 20 ஆசனங்களையும் வெல்லும் என்று நம்பிக்கை வெளியிட்ட இரா.சம்பந்தன், இதன் மூலம், மீண்டும் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையைப் …

Read More »

வல்வைப் படுகொலையின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் – தீருவில் வெளியில் அஞ்சலி.

இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட, வல்வைப் படுகொலையின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இடம்பெற்றுள்ளது. 1989ம் ஆண்டு ஓகஸ்ட் 2ஆம் திகதி வல்வெட்டித்துறைப் பகுதியில், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 84 அப்பாவிப் பொதுமக்களை இந்திய இராணுவத்தினர் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்திருந்தனர். இந்தச் சம்பவத்தில் பெருமளவு வீடுகள், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்திய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலைகளை நினைவு கூரும் வகையில், நேற்று மாலை, ஏழு …

Read More »

தேர்தல் பிரசாரங்கள் நள்ளிரவுடன் நிறைவு – இறுதி நாளில் அரசியல் கட்சிகள் கடும் பிரசாரம்.

பொதுத் தேர்தலுக்கு இன்னும் 48 மணி நேரமே உள்ள நிலையில், பிரசாரங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன. தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கு அளிக்கப்பட்டிருந்த காலஅவகாசம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்திருப்பதாகவும், இன்றும் நாளையும் கடைப்பிடிக்கப்படும் அமைதிக்காலத்தில் எந்த பிரசாரஙகளும் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று எல்லா அரசியல் கட்சிகளும் பெரியளவிலான பிரசாரக் கூட்டங்களை நடத்துவதில் ஆர்வம் காட்டியிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிளிநொச்சியிலும், …

Read More »