Saturday , September 26 2020
Breaking News

இலங்கை

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிப்பது ஒரு அரசியல் விவகாரம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிப்பது ஒரு அரசியல் விவகாரம்- அதை தமிழ் தேசிய கொள்கை உள்ள அரசியல்வாதிகளால் தான்  தீர்க்க முடியும்-தமிழர் தாயக காணாமல் ஆக்க்கப்படோரின் உறவுகளின் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா. எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலின் போது கஜேந்தி குமார் தலைமையிலான கட்சியை ஆதரிக்க உள்ளதாக தமிழர் தாயக காணாமல் ஆக்க்கப்படோரின் உறவுகளின் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார். மன்னார் நகரில் இன்றயை தினம்  ஞாயிற்றுக்கிழமை மாலை …

Read More »

திருகோணமலை சீனக்குடாவில் 80 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் கைது .

திருகோணமலை சீனக்குடா  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 80 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த ஒருவர் விளக்கமறியலில் திருகோணமலை சீனக்குடா  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 80 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த ஒருவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(2) உத்தரவிட்டார். கண்டிவீதி,சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். …

Read More »

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மக்கள் சந்திப்பொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மக்கள் சந்திப்பொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றது. இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ. ஆனந்தசங்கரி, உபதலைவர் அரவிந்தன் ஆகியுார் உரையாற்றியிருந்தனர். ஆனந்தசங்கரி – ரெலோ போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலும், புளொட் கப்பம் றெல் தொடர்பிலும், ஈபிடிபியின் செயற்பாடுகள் தொடர்பிலும், சந்திரகுமார் 710 வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்றமை தொடர்பிலும் தெரிவித்திருந்தார். அரவிந்தன் தமிழ்த் தெசியக் கூட்டமைப்பு செய்ய …

Read More »

இலங்கை உள்ளிட்ட 31 நாடுகளை அதிக ஆபத்துள்ள நாடுகளாக பிரகடனம் செய்துள்ள குவைத்.

இலங்கை உள்ளிட்ட 31 நாடுகளை அதிக ஆபத்துள்ள நாடுகளாக பிரகடனம் செய்துள்ள குவைத், இந்த நாடுகளில் இருந்து பயணிகள் விமானப் போக்குவரத்துகளை முற்றாக தடை செய்துள்ளது. குவைத் நாட்டின் சிவில் விமான போக்குவரத்துப் பணியகத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள கொரோனா தொடர்பான அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பிலிப்பைன்ஸ், லெபனான், சீனா, ஈரான், மெக்சிகோ, ஈரான், ஈராக்,பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் அதிக ஆபத்துள்ள …

Read More »

மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுமாறு யாழ். ஆயர் வேண்டுகோள்.

வாக்களிப்பைப் புறக்கணிக்க வேண்டாம் என்றும், கொரோனாவிற்குப் பயந்து வாக்களிக்காமல் இருந்து விடவேண்டாம் என்றும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும் எனத் தெரிவித்துள்ள அவர், சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய, நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். முகக்கவசங்களை அணிந்து சென்று சமூக இடைவெளியைப் பேணி வாக்களித்து விட்டு விரைவாக வீடுகளுக்குத் திரும்புமாறும் யாழ். ஆயர் வேண்டுகோள் …

Read More »

பொதுத் தேர்தலுக்கான நான்கரை இலட்சம் வாக்காளர் அட்டைகள் இன்னமும் விநியோகிக்கப்படவில்லை

வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான நான்கரை இலட்சம் வாக்காளர் அட்டைகள் இன்னமும் விநியோகிக்கப்படாமல் அஞ்சலகங்களில் தேங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர் அட்டைகள் விநியோகத்தை அஞ்சலகங்கள், கடந்த மாதம் 29ஆம் திகதியுடன் முடித்துக் கொண்டுள்ளன. எனினும், 450,000 வாக்காளர் அட்டைகள் இன்னமும் விநியோகிக்கப்படாமல் அஞ்சலகங்களில் தேங்கிக் கிடப்பதாக, அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள், தமது பகுதியில் உள்ள அஞ்சலகத்துக்குச் சென்று உரிய அடையாளத்தை …

Read More »

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக, இந்திய- இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக, இந்திய- இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டின்ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தென்ன ஆகியோருடன் இந்திய தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஷ் சூட் இந்தப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இரண்டு நாடுகளினதும் …

Read More »

இன்று நள்ளிரவுடன் முடிகிறது பிரசாரம் – உச்சக்கட்ட வாக்கு வேட்டையில் அரசியல் கட்சிகள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இன்று நள்ளிரவுடன் பிரசாரங்கள் முடிவுக்கு வரவுள்ளால் அரசியல் கட்சிகள் இன்று தமது இறுதிக்கட்டப் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளன. இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் தொடர்பான எந்தவொரு பிரசாரத்தையும், மேற்கொள்ளக் கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு கண்டிப்பாக அறிவித்துள்ளது. அச்சு, இலத்திரனியல் ஊடகங்களின் மூலமாகவோ, நேரடியாகவோ, வேட்பாளர்கள் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாது. இன்று நள்ளிரவுக்குப் பின்னர் பொது இடங்களில் உள்ள தேர்தல் பிரசார …

Read More »

குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர விளக்கமறியலில் – நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கம்பகா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு ஒன்றில் திரிபுபடுத்தப்பட்ட சாட்சியங்களை அளித்தார் என்ற குற்றச்சாட்டில், சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர நேற்றுக்காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்ட அவர், 8 மணி நேரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட …

Read More »

களனி பகுதியை சேர்ந்த காயத்ரி டில்ருக்க்ஷி என்ற விரிவுரையாளரே யானை தாக்கி, உயிரிழந்தவராவார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் யானை தாக்கி படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. களனி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய காயத்ரி டில்ருக்க்ஷி என்ற விரிவுரையாளரே யானை தாக்கி, உயிரிழந்தவராவார். யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த குறித்த விரிவுரையாளர் விகாரைக்குச் சென்று திரும்பிய போது, அண்மையில் யானை தாக்கி படுகாயமடைந்திருந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, யாழ். போதனா …

Read More »