Tuesday , September 29 2020
Breaking News

இலங்கை

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய ஆவணம்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டு முறைகள் அடங்கிய ஆவணம் சுகாதார அமைச்சினால் நேற்று நாடாளுமன்ற செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சபையில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமர்ந்திருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆசன ஒழுங்கில் மாற்றம் இருக்காது என்றும், நாடாளுமன்ற செயலாளர் தம்மிக திசநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், நாடாளுமன்ற …

Read More »

பதுளையில் வாக்காளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாவை விநியோகித்த வேட்பாளர் – தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றச்சாட்டு.

பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாவை விநியோகித்துள்ளார் என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது. தமக்கு வாக்களிப்பதற்காக குறித்த வேட்பாளரினால், 20 மில்லியன் ரூபா பணம், வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்காளர்களை விலைக்கு வாங்கும் வேலையில் வேட்பாளர்கள் இறங்கியுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். வேட்பாளர் ஒருவர் தேர்தலுக்காக …

Read More »

மீண்டும் தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் – பிந்திய கருத்துக் கணிப்புகளால் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு.

பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், மீண்டும் தொங்கு நாடாளுமன்றமே அமையலாம் என்று பிந்திய கருத்துக்கணிப்புகள் கூறுவதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எதிர்வரும் புதன்கிழமை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்றும் நாளையுமே பிரசாரம் செய்ய முடியும் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், ஆளும் பொதுஜன பெரமுன, மூன்றில் …

Read More »

ஒக்ரோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் 15 நிமிடங்கள் மேலதிகமாக வழங்க தீர்மானம்.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் முதலாவது வினாத்தாளுக்கு 15 நிமிடங்கள் மேலதிகமாக வழங்குவதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். இதுவரையில் 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த முதல் வினாத்தாளுக்கு, ஒரு மணி நேரம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, இரண்டாம் வினாத்தாளில் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு …

Read More »

அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது – மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தகவல்

அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் 98 சத வீதமும், களுத்துறை மாவட்டத்தில் 97 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளன. அஞ்சல் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மூலமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில், 15,200 …

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாக்குச் சீட்டுகளால் நாட்டைப் பிளவுபடுத்த அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது

துப்பாக்கி ரவைகளால் நாட்டைப் பிளவுபடுத்த முயன்ற விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாக்குச் சீட்டுகளால் நாட்டைப் பிளவுபடுத்த அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மினுவங்கொட வாரச் சந்தைப் பகுதியில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். “இம்முறை பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவே வெற்றி பெறும். வடக்கு, கிழக்கு …

Read More »

1 தொடக்கம், 13 வரையான அனைத்து மாணவர்களுக்குமான கல்வி செயற்பாடுகள் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்.

கொரோனா தொற்று காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்த தரம் 1 தொடக்கம், 13 வரையான அனைத்து மாணவர்களுக்குமான கல்வி செயற்பாடுகள் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன், பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அட்டவணை ஒன்றும் கல்வி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பாடசாலைகளில், மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. …

Read More »

பொதுத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறையும் – கண்காணிப்பு அமைப்பு கணிப்பு.

எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவாக இருக்கும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று எதிர்வு கூறியுள்ளது. தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இது தொடர்பாக நேற்று தகவல் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் சூழலால் அதிகளவு வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்வதை தவிர்க்கக் கூடும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் 83சத வீத …

Read More »

பிரதமர் நியமித்த தொல்பொருள் ஆலோசனை குழுவிலும் இடமில்லை – தமிழ்பேசும் மக்கள் கடும் அதிருப்தி.

சிறுபான்மையின பிரதிநிதிகளுக்கு இடமளிக்கப்படாத கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணியை ஜனாதிபதி நியமித்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அதேவிதமான தொல்பொருள் ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளார். இது தொடர்பாக பிரதமரின் ஊடகப் பிரிவு நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கான உதவிகளை வழங்குவதற்காக, பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் நேற்று 20 பேர் கொண்ட தொல்பொருள் ஆலோசனை குழுவொன்று …

Read More »

செயற்றிறன் மிக்க அரச சேவையை ஸ்தாபிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஊழல் மற்றும் மோசடிகளை நிறுத்தி செயற்றிறன் மிக்க அரச சேவையை ஸ்தாபிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். 15 இலட்சத்திற்கும் அதிக அரச ஊழியர்கள் நாட்டில் காணப்படுகின்ற போதிலும், தமக்கான சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவது குறித்து நாளாந்தம் முறைப்பாடுகள் பதிவாவதாக ஜனாதிபதி கூறினார். இலஞ்சம், ஊழல் மோசடி ஆகியவற்றை இல்லாதொழித்து மக்களுக்கான அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடிய அரச சேவையை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Read More »