Wednesday , September 30 2020
Breaking News

இலங்கை

புதுக்குடியிருப்பு பகுதியில் 738 மதன மோதக வில்லைகளுடன் ஒருவர் கைது.

திருகோணமலை – தம்பலகாமம் – புதுக்குடியிருப்பு பகுதியில் மதன மோதக வில்லைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இன்றய தினம் விற்பனை நிலையம் ஒன்றை சோதனை செய்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்பலகாமம் அக்கினிப் பகுதியை சேர்ந்த 49 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வந்தனர்.

Read More »

இயற்கை சூழலை சேதப்படுத்துபவர்களை கைது செய்ய அனுமதி வேண்டும்.

இயற்கை சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தும் நபர்களை கைது செய்ய தமக்கு அதிகாரம் வேண்டும் என சட்ட மா அதிபர் திணைக்களத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்ததாக மத்திய சுற்றுசூழல் ஆணையத்தின் தலைவர் சிறிபால அமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Read More »

மீனவர்களுக்கு எச்சரிக்கை. வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு.

வங்காள விரிகுடாவில் குறைந்த வளிமண்டலவியல் அமுக்கம் உணரப்பட்டதால் கடற்தொழில் ஈடுபடுபவர்கள் அவதானமாக செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் சிலபல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More »

வத்தளை உட்பட பல்வேறு பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு.

வத்தளை பகுதிகளை அண்மித்த சில பகுதிகளுக்கு இன்றிரவு 08 மணி முதல் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. வத்தளை தெலபொத, எவரிவத்த, வெலஅமுன, பலகல,காலாகாதுவ, மற்றும் எலகந்த ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு மேற்ட்கொள்ளப்பட உள்ளதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read More »

காவல்துறையினரின் அதிரடி முடிவு. ஒரே நாளில் 1113 பேர் கைது.

மேல்மாகாணத்தில் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் மாலை 06 மணி வரை இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More »

நாளைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள சட்ட மூல வரைபு.

20 வது அரசியலமைப்பு திருத்த சட்ட அமைப்பு நாளைய தினம் வாசிப்புக்காக நாளயத்தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பிரதி செயலாளர் நில் இத்தவல இதனை தெரிவித்துள்ளார்.

Read More »

தயாசிறி வெளியிட்ட விசேட கருத்து.

ஸ்ரீ லங்கன் விமானசேவை நிறுவனங்களுக்கு பத்திக் துணி அறிமுகப்படுத்த வேண்டுமென அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்றய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதை தெரிவித்துள்ளார்.

Read More »

கேள்வி எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தி.

20 வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூல வரைபு தொடர்பில் – லங்கா சுதந்திர கட்சியின் அபிப்பிராயம் எவ்வாறானது என்பதனை ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியது. காலியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

Read More »

காவற்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்.

காயங்களுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டரை பயன்படுத்தி வர்த்தக நிலைய உரிமையாளரிடம் பணம் வாங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தம்புள்ளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More »

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கண்டறிந்த காவற்துறை.

கொழும்பு மாவட்டத்தை மையமாக கொண்ட கெரோயின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் விபரங்களை வெலிக்கடை காவற்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க கூடியதாய் இருந்ததாக தெரிவிக்கபட்டுள்ளது. அத்துடன் போதைப்பொருள் வர்த்தகரான முஹமட் பாருக் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read More »