Monday , September 28 2020
Breaking News

இலங்கை

சற்று முன்னர் மேலும் 03 பேருக்கு கொரோனா.

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3287 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 3284 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், நாட்டில் Covid – 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை Covid – 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 03 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது. …

Read More »

வழமைக்கு திரும்பிய கொத்மலை வீதியின் போக்குவரத்து நடவடிக்கை.

நாவலப்பிட்டி – கெட்டபுலா ஊடாக கொத்மலை செல்லும் பிரதான வீதியின் திஸ்பனை பகுதியில் இன்று (20) அதிகாலை மரமொன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதேச மக்கள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அக்கற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தனர். மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இவ்வீதியில் சுமார் மூன்று மணித்தியாலத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்ததாக எமது செய்தியாளர் …

Read More »

கொக்கைன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.

கல்பிட்டிய பகுதியில் கொக்கைன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது குறித்த சந்தேக நபரிடம் இருந்து 480 கிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

Read More »

கண்டி நில அதிர்வு விவகாரம் – ஆராய்வு நடவடிக்கைகளில் இணையவுள்ள இரண்டு பல்கலைக்கழகங்கள்.

கண்டியில் – திகன உள்ளிட்ட பல இடங்களில் அண்மையில் ஏற்பட்டிடிருந்த நில அதிர்வு தொடர்பிலான மேலதிக ஆராய்வு நடவடிக்கைகளுக்காக மொரட்டுவ மற்றும் பேராதனய பல்கலைக்கழகங்களையும் இணைத்துக்கொள்வதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தீர்மானித்துள்ளது. அதன்படி, குறித்த பல்கலைக்கழகங்களையும் இணைத்துக்கொண்டமை தொடர்பில் பணிப்பாளர் சபைக்கு அனுமதி கடிதமொன்றை முன்வைப்பதற்கு முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அதன் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அடுத்த வாரம் மொரட்டுவ மற்றும் பேராதனய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு …

Read More »

கண்டியில் மண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி கட்டிடத்தில் மீட்க்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு.

  கண்டி – பூவெளிக்கடை பகுதியில் உள்ள 5 மாடிக்கட்டிடம் ஒன்று தாழிறங்கிய நிலையில் அதிலிருந்து மீட்கப்பட்ட ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும் கட்டிடத்தில் சிக்கியிருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதோடு, கட்டிடத்தில் சிக்கிய இருவரை காணவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Read More »

மண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி கட்டிடத்தில் சிக்கியிருந்த குழந்தை மீட்பு.

கண்டி – பூவெளிக்கடை பகுதியில் உள்ள 5 மாடிக்கட்டிடம் ஒன்று தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த கட்டிடம் அருகில் உள்ள வீடொன்றின் மீது வீழ்ந்து பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வீட்டில் குழந்தை உள்ளிட்ட 3 பேர் சிக்கியிருந்தனர். அவர்களில் குழந்தை மாத்திரம் தற்போது இராணுவத்தினரால் மீட்க்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

குளவி கொட்டுக்கு இலக்கான 8 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி.

ஹப்புத்தளை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 8 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி. இன்று முற்பகல் தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய போதே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இந்தநிலையில் ஹப்புத்தளை – பங்கெட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு.

covid – 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை covid – 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரையில் மூவாயிரத்து 281 பேருக்கு covid – 19 தொற்றுறுதியாகியுள்ளது. அதேநேரம் நாடளவு ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று …

Read More »

மக்கள் நலனுக்காக மக்கள் தேசிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்.

மக்கள் நலனை கருத்திற் கொண்டு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றாக இணைந்து பயணிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More »

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கான ஓர் விசேட அறிவிப்பு.

தெற்கு அதிவேக பாதையின் வெலிபென்ன பகுதியில் பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால்,மாத்தறை நோக்கி பயணிக்கும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சாரதிகள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் .

Read More »