Saturday , September 26 2020
Breaking News

இலங்கை

இராகலையில் தீ விபத்து – மூன்று கடைகள் தீக்கிரை.

நுவரெலியா இராகலை நகரில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பிரதேச பொது மக்கள் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராகலை காவல்துறையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். அத்துடன் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன. தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மின் ஒழுங்கு காரணமாக தீ ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளன. …

Read More »

காவற் துறையினர் அதிரடி நடவடிக்கை. ஒரே இரவில் 249 பேர் கைது.

நாடு முழுவதும் நேற்றிரவு 08 மணி முதல் இன்று காலை 04 மணி முதல் வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது குடி போதையில் வாகனம் செலுத்திய 249 பேர் கைது. அத்துடன் 249 வாகனகளும் கையகப்படுத்தப்பட்டதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது. அதேபோல பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 3355 வழக்குகளும் பதியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Read More »

மருத்துவமனையில் திடீரென உயிரிழந்த நபர்.

காலி-நியாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்கப்பட்டுள்ளது. ஹொரன்கல பகுதியை சேர்ந்த 46 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த நபர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்.

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் தற்சமயம் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கமைய பாணந்துறை பகுதியில் போதைப்பொருளுடன் அழகுக்கலை சார் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read More »

யாழ்ப்பாணத்தில் நரிகளின் நடமாட்டம்.

யாழ்ப்பாணத்தில் நரிகளின் நடமாட்டம்.. என்றுமில்லாதவாறு கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் நரிகள் நடமாடுவதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக சில நரிகள் நடமாடுவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த நரிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் செம்மணி இந்து மயானத்தை அண்டிய பகுதிகளில் நடமாடுவதை அவதானித்துள்ளனர்.. இதனால் அந்த பகுதியை அண்மித்த வாழும் மக்கள் மற்றும் சிறுவர்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தல் விடப்பட்டுள்ளது.. இந்த …

Read More »

மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் சேதம்.

ஹட்டன் – திம்புலபத்தனை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகளும் கட்டிடம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

வெளியேறினார் ரணில் விக்கிரமசிங்க.

சாட்சியம் வழங்குவதற்காக அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் நாடாளுமன்ற எம்.சுமந்திரன் ஆகியோர் அங்கிருந்து வெளியேறினார்

Read More »

நேற்றிரவு 401 பேர் கைது.

மேல் மாகாணத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 401 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண சிரேஷ்ட்ட பிரதி காவல் துறை மா அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. பேரூந்து நிலையம் புகையிரத நிலையம் மற்றும் மயான பூமி ஆகிய பகுதிகளில் போதை பொருள் பயன்படுத்தியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More »

ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அறுவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிக்க, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம பாட்டலி சம்பிக்க ரணவக்க, அனுரகுமார திசாநாயக்க, எம் சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

Read More »

நுகர்வோர் சேவை அதிகாரிகளின் விசேட சுற்றிவளைப்பு.

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது 12 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, விற்பனைக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவிட்ட, பெம்முல்ல, அமுனுகொட மற்றும் வெலிவேரிய ஆகிய பகுதிகளிலே இவ்வாறு சோதணைகள் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »