Monday , September 28 2020
Breaking News

இலங்கை

போதைப்பொருளுடன் 6 பேர் கைது.

கற்பிட்டி – பரமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது 32 கிலோ கிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்படையினர் மற்றும் காவற்துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவ்வாறு கேரள கஞ்சா மீட்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருள் மேலதிக பரிசோதனைக்களுக்காக கற்பிட்டி காவற்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், எல்பிட்டிய பகுதியில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த 06 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக …

Read More »

அதிகரித்து வரும் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை.

இந்த வருடத்தில் அடையாளம் காணப்பட்ட மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி நாடு திரும்பிய உக்ரைன் நாட்டவர் ஒருவரே இவ்வாறு மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read More »

முதற்கட்டமாக 10 000 வாக்குகளை திரட்டுவதற்கு சஜித் அணி களமிறங்குகிறது.

முதற்கட்டமாக 10 ஆயிரம் வாக்குகளை திரட்டுவதனை நோக்கமாக கொண்ட விசேட அபிவிருத்தி வேலை திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டம் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

Read More »

சாபாநாயகரை சந்தித்த அமெரிக்க தூதுவர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டேப்லிட்ஸ், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு சபாநாயகரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது புதிய அரசியலமைப்பு covid – 19 க்கு பின்னரான நாட்டின் அபிவிருத்தி, உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா.

ஹொங்கொங், லிபியா மற்றும் பபஹரைன் ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றானவர்களின் எண்ணிக்கை 3281 ஆக அதிகரித்துள்ளது.

Read More »

முட்டையின் விலையில் மாற்றம்.

நாட்டில் உள்ள மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெற்றுத்தரும் உணவுகளில் முட்டையும் ஒன்று ஆகும். இலங்கையின் சராசரியாக நாளொன்றுக்கு 65 இலட்சம் முட்டை தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் முட்டையின் தேவை 90 இலட்சம் வரை உயர்வடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான முட்டையின் விலை அதிகரித்தமை தொடர்பில் எமது செய்தி குழு மேற்கொண்ட விசேட ஆய்வு ஒன்றின் தொகுப்பே இது.

Read More »

நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்.

மறைந்த முன்னாள் அமைச்சர் ஹெக்டர் கொம்பேகடுவகேவின் 37 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

Read More »

பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபர்கள்.

ஆணைவிழுந்தான் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

சட்ட விரோதமாக அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது.

மொனராகலை மாலிகாவில பகுதியில் தனியார் இடம் ஒன்றில் சட்ட விரோதமான முறையில் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பல நாட்களாக இவ்வாறு அகழ்வு நடவடிக்கைகளின் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஓக்கம்பிட்டிய மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

Read More »

மருத்துவர் மீது தாக்குதல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

மெனிக்யின்ன பகுதியில் மருத்துவர் ஒருவர் மீது அரசியல்வாதி ஒருவர் தாக்கல் நடத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச வாசிகள் போராட்டம் ஒன்றில் இடப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. குண்டசாலை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவராலே இந்த தாக்குதல் சம்பவம் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் கண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »