Friday , September 25 2020
Breaking News

இலங்கை

குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்….! மட்டக்களப்பில் சம்பவம்.

பிறந்து 40 நாட்களே ஆண் குழந்தையை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் அந்த குழந்தையின் கழுத்தில் துணி ஒன்றால் கட்டி இறுக்கி கொலை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த பெண் என குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தையின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

கலேன் பிதுவெவ பகுதியில் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்குமாறு கோரி பகுதி வாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

Read More »

சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை.

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 கோடியே 03 இலட்சமாக அதிகரித்துள்ளது. அத்துடன் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 இலட்சத்து 50 ஆயிரமாக காணப்படுகிறது.

Read More »

மஞ்சள் தொடர்பில் தற்போது வெளியான செய்தி.

யால பருவத்தில் பயிரிடப்பட்ட ‘அமு கஹா’ தயாரிக்க தேவையான தொழில்நுற்ப அறிவு மாவட்ட அளவில் நுகர்விற்கு ஏற்றது என்று ஏற்றுமதி வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை 1500 ஹெக்டயர் அளவில் இந்த மஞ்சள் பயிரிடப்பட்டதாக கூறப்படுகிறது.

Read More »

வீதி ஒழுங்கு முறையில் புதிய தீர்மானம்.

கடந்த சில நாட்களாக அமுல்படுத்தப்பட்டு வரும் புதிய வீதி ஒழுங்கு தொடர்பில் மொறட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் காவல் துறை மேற்கொண்ட ஆய்வுகளை அடுத்து உந்துருளி மற்றும் முற்சக்கர வண்டிகளுக்கு அதிக இடம் வழங்க பிரதி காவற்துறை மா அதிபர் மற்றும் போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read More »

இருபதாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் வெளியான விசேட தகவல்.

இருபதாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் முதலாம் வாசிப்பிற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றதில் சமர்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவெல இதனை அறிவித்துள்ளார். அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல வேண்டுமாயின் அதற்காக 7 நாட்கள் வழங்கப்படும். அவ்வாறு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்ற செயற்பாடுகளுக்கான 3 வாரகாலப்பகுதி வழங்கப்படும். நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டதன் …

Read More »

மஞ்சள் தூள் தொகையுடன் 10 பேர் கைது.

புளுமெண்டல் பகுதியில் உள்ள களஞ்சிய சாலை ஒன்றில் சட்ட விரோதமான முறையில் பதுக்கி வைக்க பட்டு இருந்த 33000 கிலோ கிராம் மஞ்சள் தூள் தொகையுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More »

பொது மக்களுக்கான எச்சரிக்கை – காலநிலையில் மாற்றம்.

நாட்டின் பல பகுதிகளிலும் நாளைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாக்கக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மழையுடன் காற்றும் வீசுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

சற்று முன் மேலும் 09 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3174 ஆக அதிகரித்துள்ளது.

Read More »

குளவி கொட்டுதலுக்கு இலக்காகிய தொழிலாளர்கள்.

பொகவந்தலாவை டின்சீன் தோட்டத்தில் குளவி கொட்டுதலுக்கு இலக்கான 8 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.30 இற்கு இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More »