Monday , September 28 2020
Breaking News

இலங்கை

நிவ் டயமன் கப்பலின் தலைவருக்கு நீதிமன்றில் முன்னிலை ஆகுமாறு அறிவித்தல்.

நிவ் டயமன் கப்பலின் தலைவரை நீதிமன்றில் முன்னிலை ஆகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. எம் ரீ நிவ் டயமன் கப்பலின் தலைவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலை ஆகுமாறு குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

பிரபல போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் கைது.

ஜோச என அழைக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளரின் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஹெரோயின் ரக பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

Read More »

எதிர்வரும் 29 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகள்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு ஏதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 29 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனு இன்றய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Read More »

கொழும்பு வாழ் மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 1 பகுதியில் இன்றிரவு 8 மணி முதல் 12 மணிநேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது. அதே நேரம் கொழும்பு 2,3,7,8,9,10 மற்றும் 11 ஆகியன பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடனான நீர்விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Read More »

அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்.

பேலியகொடை பகுதியில் 100 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 03 இலட்சத்து பணமும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாதுக்கை பகுதியை சேர்ந்தவர் என காவற்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கிளிநொச்சி பகுதியில் 11 கிலோ 224 கிராம் கஞ்சா ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 43 வயதான …

Read More »

பேராதனை பல்கலைக்கழக நிர்வாகத்தின் அதிரடி தீர்மானம்.

பகிடிவதை தொடர்பில் பெற்றோர்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கு தற்காலிக விடுமுறையை வழங்க பல்கலைக்கழ நிர்வாகம் தீர்மானித்துள்ளது. பெற்றோர்களால் வழங்கப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார். பகிடிவதை தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை என்றும், அது குறித்து ஆராய்வதற்ற்கு அவசர கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

ஒன்லைன் முறையில் மோசடி….

பற்றுச்சீற்று வெற்றி பெற்றவர்களுக்கான பணப்பரிசி வெளிநாடுகளில் காத்திருக்கிறது என தெரிவித்து ஒன்லைன் முறைமையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மோசடி சம்பவம் தொடர்பில் இதுவரையில் 101 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் நைஜீரிய பிரஜைகள் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

கொரோன தொடர்பில் வெளியான விசேட செய்தி.

நேற்று இலங்கையில் கொரோன தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களளின் எண்ணிக்கை 3271 ஆக காணப்படுகிறது. அதேபோல், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3021 ஆக காணப்படுகிறது. இதற்கமைய இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 237 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 12 என்பது குறிப்பிடத்தக்கது.  

Read More »

ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

ஆரோக்கியமான, ஒழுக்கமான, வளமான சமுதாயத்தை உருவாக்க பிரதானமாக பங்களிக்கும் விளையாட்டு துறையை சிறப்பாக முன்னெடுப்பது தமது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டா ராஜபஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அதனை தெரிவித்துள்ளார்.

Read More »

வீசா மோசடி தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவையில் நால்வருக்கு பணி நீக்கம்.

வீசா மோசடியுடன் தொடர்புடைய பணியாளர்கள் நால்வரின் சேவை ஸ்ரீ லங்கா விமான நிறுவனத்தினால் இந்த வருடம் ஜூலை மாதம் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த பணியாளர்களை கைது செய்வது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் பல்வேறு கருத்துக்கள் தொடர்பில் அந்த நிறுவனம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அத்துடன் அவர்கள் தற்பொழுது விமான சேவையின் எந்தவொரு நடவடிக்கையிலும் தொடர்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள …

Read More »