Wednesday , September 30 2020
Breaking News

தற்போதைய செய்தி

வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பியவர் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் கைது

வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளி நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த சிலாபம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு தப்பி ஓடியுள்ள நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் சனிக்கிழமை(12) மாலை மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து சௌத்பார் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் கட்டார் நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டிருந்த சிலாபம் …

Read More »

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கையில் மேல்,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

Read More »

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் விசேட அறிவித்தல்..!

எதிர்வரும் காலங்களில் சாரதி அனுமதி பத்திரம் பெறும் நபர்களுக்கு இரத்த பரிசோதனை மேற்கொள்ள போவதில்லை என போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு x-ray பரிசோதனையும் மேற்கொள்ள போவதில்லை என்றும் சக்கரையின் அளவு மற்றும் குருதி அழுத்தம் தொடர்பான பரிசோதனைகள் நடைபெறும் எனவும் இது அனுமதி பத்திரம் பெறுவதில் தாக்கத்தை செலுத்தாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

Read More »

கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது

கூரிய ஆயுதங்களுடன் திக்வெல்ல – போரகந்த பகுதியில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இடம் பெற்ற சுற்றி வளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யபட்ட மூவரும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Read More »

சீரற்ற காலநிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காற்றின் வேகமானது மணிக்கு 50 தொடக்கம் 60 வரை இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,123ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,123ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 186 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,925 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More »

துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு

காலி-தொடகொட பகுதியில் உள்ள தனியார் இடம் ஒன்றில் இருந்து டி 56 ரக துப்பாக்கி மற்றும் 123 ரவைகள் என்பன மீட்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இடத்தின உரிமையாளர் இடத்தை சுத்தம் செய்யும் பொழுது இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டள்ளதாக கூறப்பட்டுள்ளது.இது தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவறுத்தல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

தேசிய பட்டியல் விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் அதுரலிய ரதன தேரர் உள்ளிட்டோரை உள்ளடக்கிய அபே ஜனபல கட்சியானது உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.அக்கட்சியில் ஏற்பட்டுள்ள தேசிய பட்டியல் வேட்பாளர் பிரச்சினையை முன்னிலைப்படுத்தியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Read More »

விசேட படகுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள எம்.ரி.நியூ டயமன்ட் கப்பல்

சங்கமன்கண்டி பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில், ஆழ்கடல் பரப்பில் தீப்பற்றிய, எம்.ரி.நியூ டயமன்ட் கப்பலில், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், குறித்த கப்பல் இந்தியாவின் விசேட படகுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பணிகளில் இணைந்திருந்த இந்திய கடலோர பாதுகாப்பு படை தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் மிதந்து செல்வதை தவிர்ப்பதற்காக, நேற்றிரவு 7 மணியளவில், ஏ.எல்.பி விங்கர் ரக படகுடன் …

Read More »

அரசாங்கத்தின் செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது-எம்.ஏ.சுமந்திரன்

19 ஆம் திருத்தத்தை நீக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளமை ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம் இலங்கையின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அரசியலமைப்பு ஒரு சமூக ஒப்பந்தம். நாட்டிலுள்ள சகல …

Read More »