Friday , September 25 2020
Breaking News

தற்போதைய செய்தி

கடும் காற்றினால் 26 வீடுகள் பகுதியளவில் சேதம்

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று வீசிய கடும் காற்றுக்காரணமாக 26 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் இதனைக் தெரிவித்துள்ளார். இதற்கமைய மொரவௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 16 வீடுகளும் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 4 வீடுகளும் கிண்ணியா பிரதேச செயலாளர் …

Read More »

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்

நாட்டில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதி வரையில் 22 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது. கட்டாரில் இருந்து நாடு திரும்பி நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேருக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 3071 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள 191 பேர் தொடர்ந்தும் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் …

Read More »

ஒருங்கிணைப்புக் குழுக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

பல மாவட்டங்களில் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்து தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பங்களிக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.நேற்றைய தினம் ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More »

புத்தளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்து

புத்தளம்-அட்டவில்லுவ பிரதேசத்தில் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணொருவர் மீது பாரவூர்தி ஒன்று மோதியதில் குறித்த பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார். நேற்று (30) இடம்பெற்ற இந்த விபத்தில் 70 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், குறித்த பெண் புத்தளம் அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் …

Read More »

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ளார்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் இன்று (31) முன்னிலையாகவுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் குறித்த ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 21ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவு அழைப்பு விடுத்திருந்த நிலையில், குறித்த …

Read More »

சட்ட விரோதமாக தங்கிய 13 பேர் கைது

வீசா அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக உள்நாட்டில் தங்கியிருந்த தாய்லாந்து மற்றும் சீன் நாட்டு பெண்கள் 13 பேர் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.காவற்துறை அதிரடி படையினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More »

தவறுதலாக இடம்பெற்றுள்ள மின் துண்டிப்பு

தேசிய மின்சார கட்டமைப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற திடீர் மின் துண்டிப்பு தவறுதலாக இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. திடீர் மின் துண்டிப்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவின் அறிக்கைக்கமைய இவ்விடயம் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் மீண்டும் அவ்வாறான தவறு இடம்பெறாது என குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த அறிக்கை இன்று பிற்பகல் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நேற்று முன் தினம் குழுவின் அறிக்கை விடயம் தொடர்பிலான அமைச்சர் டலஸ் …

Read More »

32 ஆயிரத்து 816 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை பூர்த்தி செய்துள்ளனர்

தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை பூர்த்தி செய்த 32 ஆயிரத்து 816 பேர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுதனை தடை செய்யும் தேசிய மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. மேலும் 65 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 7058 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை , நேற்றைய தினம் 1580 பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் நேற்றைய தினம் 12 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து நாடுதிரும்பிய 12 …

Read More »

அரசாங்க அச்சுத் திணைக்களம் மூலமாக தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு அச்சுப்பணிகள்

தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அச்சுப் பணிகள் அனைத்தையும் அரசாங்க அச்சுத் திணைக்களம் மூலம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் முன்னேற்றம் குறித்து இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான வசதிகளை முதலாவதாக ஏற்படுத்திக் கொடுக்க …

Read More »

யாழ் நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரள்வு

இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டுச் சென்ற தொடருந்து ஒன்று கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் தடம்புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More »