Monday , September 28 2020
Breaking News

உலகம்

டிக்டாக் தொடர்பில் ட்ரம் வழங்கியுள்ள அனுமதி.

அமெரிக்காவில் தடையை எதிர்நோக்கியுள்ள டிக் டாக் அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனமான ஒரகல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அப்பிளிகேஷனை அமெரிக்க நிறுவனம் கொள்வனவு செய்யுமானால் அதற்கு தமது ஆசீர்வாதம் உண்டு என அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம் தெரிவித்துள்ளார்.

Read More »

சர்வதேச ரீதியில் 03 கோடியை கடந்த கொரோன தோற்றாளர்களின் எண்ணிக்கை.

சர்வதேச ரீதியில் கொரோன தோற்றாளர்களின் எண்ணிக்கை 03 கோடியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய சர்வதேச ரீதியில் கொரோன தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 30,025,096 ஆக காணப்படுகிறது. அத்துடன் உலகளவில் கொரோன தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 944,677 ஆக காணப்படுகிறது.

Read More »

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி சோதனைகள்

ஒரு நோயாளிக்கு ஏற்பட்ட பக்க விளைவு காரணமாக இடைநிறுத்தப்பட்ட அஸ்ட்ராசெனெகா  நிறுவனம் மற்றும்  ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொவிட் -19 தடுப்பூசியின் சோதனைகள், மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியினால் பாதக விளைவுகள் ஏற்பட்டுள்ளதா? என்பதை ஆராய்வதற்காக பரிசோதனைகள் இடைநிறுத்தப்படுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பரிசோதனையை தொடருவதற்கு பாதுகாப்பனதாக அது கருதப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தடுப்பூசி பரிசோதனை மீள ஆரம்பிக்கும் செய்தியை பிரித்தானிய சுகாதார செயலாளர் …

Read More »

கோவிட்-19 தடுப்பூசி சிறந்த பெறுபேற்றை வழங்கியது

ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஆரம்பக்கட்ட பரிசோதனைகள், நோய் எதிர்ப்பு சக்தி அறிகுறிகளை வெளிக்காட்டியுள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கையில், இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒவ்வொருவரும், வைரஸக்கு எதிராக போராடுவதற்கான  எதிருடலை உருவாக்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேநேரம், கடுமையான பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

புற்று நோய்க்கான மருந்து தேனியில் இருந்து கண்டுபிடிப்பு

அதிகமான மக்கள் பாதிக்கப்படும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனீக்களின் உடலில் காணப்படும் நச்சுத்தன்மை கொண்ட ஒரு பதார்த்தமே புற்றுநோய்க்கான சிறந்த மருந்து என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக மார்பக புற்றுநோய்க்கான மருந்தாக இது அமையும் என்பதும் அவர்களின் ஆய்வாக உள்ளது. இந்த நச்சுத்தன்மை கொண்ட பதார்த்தமானது 60 நிமிடங்களில் புற்று நோய்க்கான செல்களை அழிக்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

Read More »

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இணையும் 172 நாடுகள்

உலகளாவிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் நாடுகள் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் தமது விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். செப்டம்பர் 18க்குள் சேர விரும்பும் நாடுகள் உறுதிப்படுத்தப்பட்டு, அக்டோபர் 9 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டிய ஆரம்பக் தொகையை செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி வசதியுடன் …

Read More »

கொரோனா தொற்றுக்குள்ளான உசைன் போல்ட்..

உலகின்வேகமான  ஓட்ட வீரர் உசைன் போல்ட் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

Read More »

நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தடுப்பு பணிகளில் மேலும் 500 இராணுவத்தினர்

நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், தடுப்பு பணிகளில், மேலும் 500 இராணுவத்தினர் ஈடுபடுத்தபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நியூசிலாந்தில் 102 நாட்களாக கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படாமல் இருந்தது. கடந்த 11ம் திகதி முதல் ஆக்லாண்ட் நகரில் மீண்டும் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த நகரின் எல்லைப் பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் 1200 படை வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியது. புதிதாக கொரோனா தடுப்பு …

Read More »

அவுஸ்ரேலியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் – பிரதமர் ஸ்கொட் மொறிசன்

அவுஸ்ரேலியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலையுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்துள்ள அஸ்ட்ராஜெனக்கா நிறுவனத்துடன் அவுஸ்ரேலிய அரசு ஒரு உடன்பாட்டைச் செய்துள்ளது. தடுப்பு மருந்து பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்தவுடன், அதை உள்நாட்டில் தயாரித்து அவுஸ்ரேலியாவில் உள்ள 2.5 கோடி மக்களுக்கும் இலவசமாக போடப்படும் என பிரதமர் ஸ்கொட் மொறிசன் பிபிசி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் …

Read More »

சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு சீனாவின் லேசான் என்னுமிடத்தில் இமே மலைப் பகுதியில் 1,200 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட 233 அடி உயரம் கொண்ட பாரிய புத்தர் சிலை அமைந்துள்ளது. இந்த புத்தர் சிலை யாங்ஸ்டே நதிக் கரையில் அமைந்துள்ளது.தற்போது சிச்சுவான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் யாங்ஸ்டே நதியில் …

Read More »