Tuesday , September 29 2020
Breaking News

உலகம்

இத்தாலியில் தலைஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மூலம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் தலைஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மூலம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் கொண்ட மருத்துவர்கள் மற்றும் தாதிகள் அடங்கிய குழுவினர் இந்த வெற்றிகரமான அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இதற்காக 3டி மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு, ஒரு வருடத்துக்கும் மேலாக மருத்துவர்கள் திட்டமிட்டு வந்தனர். மண்டை ஓட்டுடன் ரத்த நாளங்களும் இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு ஒட்டி இருந்தது. இரண்டுவயதுடைய இந்தக் குழந்தைகளின் தலையை பிரித்தெடுக்கும் அறுவைச் சிகிச்சை …

Read More »

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முதல்வர் அலுவலகத்துக்கு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,108 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 47 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கான்பூர், ஆக்ரா, மீரட் போன்ற நகரங்களில் நூற்றுக்கும் …

Read More »

திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்ளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து எம்.எல்.ஏ கணேசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர். தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் …

Read More »

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் நேரம் வந்து விட்டது – அமெரிக்க இராஜாங்கச் செயலர் கருத்து.

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் நேரம் வந்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க- சீன முரண்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இதையடுத்து, சீனாவுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் அதேவேளையில் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறது. இந்தநிலையில் உலகத்துக்கு எதிராக சீனா முன்வைத்துள்ள சவாலுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ, …

Read More »

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர், பசு கோமியத்தை குடிக்குமாறு அறிவுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர், பசு கோமியத்தை குடிக்குமாறு அறிவுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் பல்வேறு மருத்துவ முறைகள் கூறப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மேற்கு வங்க மாநில பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திலீப் கோஷ் பசுவின் கோமியத்தை குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாறு அறிவுறுத்தி …

Read More »

இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இன்று முழு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும் தமிழகம் முழுவதும், எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று, அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். வாகனங்கள் எதுவும் இயங்காது. மக்கள் அனைவரும் வெளியில் வராமல், வீடுகளிலே தங்கியிருந்து, அரசுக்கு ஒத்துழைப்பு தர,வேண்டும். என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More »

பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோராவுக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் கடந்த சில நாட்களாக தினமும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்றும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை, சுமார் 20 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்தநிலையில், கடந்த 7ம் திகதி, பிரேசில் …

Read More »

நாகாலாந்து மாநில முதலமைச்சருக்கு கொரோனா அறிகுறி.

நாகாலாந்து மாநில முதலமைச்சருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நாகாலாந்து மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ, கடந்த வாரம் தனது அமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோருடன் புதுடில்லி சென்று அங்கு மாநில சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். புதுடில்லியிருந்து நாகாலாந்து திரும்பிய பின்னர் அவர், மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியையும் சந்தித்தார். இந்த நிலையில் முதலமைச்சர் நெய்பியு …

Read More »

மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் ஏழு புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்கள், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் ஏழு புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்கள், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் இவர்கள் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழந்த புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, குவைத், கட்டார், ஓமான், மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலேயே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் …

Read More »

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வகங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தும் ரஷ்யா – மேற்கு நாடுகள் குற்றச்சாட்டு.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆய்வகங்கள் மீது சைபர் தாக்குதல்களை நடத்தி, தடுப்பு மருந்துகளை திருடும் முயற்சியில் ரஷ்ய ஹேக்கர் குழுவினர் இறங்கியுள்ளதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், ரஷ்யா அதன் ஹேக்கர்களை பயன்படுத்தி கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்கும் ஆய்வக கணினிகளை …

Read More »