Friday , September 25 2020
Breaking News

உலகம்

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சென்னை, கிறீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக அமைச்சர் நிலோபர் கபிலின் மகன், மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. அமைச்சர் நிலோபர் கபில் நேற்று அமைச்சரவை கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஏற்கனவே தமிழக அரசின் மூன்று அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று …

Read More »

மும்பையில் அடுத்தடுத்து இடிந்து விழுந்த கட்டடங்கள் – 7 பேர் பலி, 16 பேர் படுகாயம்.

மும்பை நகரில் நேற்று இரண்டு கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மும்பையில் உள்ள போர்ட் பகுதியில் இருந்த ஐந்துமாடி கட்டிடம் கடும் மழை காரணமாக நேற்று பிற்பகல் 4.40 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் தங்கி இருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் …

Read More »

இந்து கடவுள்களை இழிவுபடுத்தி, யு டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டவர்கள் கைது.

இந்து கடவுள்களை இழிவுபடுத்தி, யு டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டவர்கள் மீது, மதக்கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ், தமிழகப் பொலிசார் வழக்குப் பதிவு செய்து, ஒருவரை கைது செய்துள்ளனர். கருப்பர் கூட்டம் யு டியூப் சனலை நடத்தி வரும், சுரேந்தர் நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சனலை தடை செய்ய வேண்டும் என, சென்னை, பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில், …

Read More »

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், அங்கு அதிகபட்ச சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உலகின் 3வது பொருளாதார சக்தியாக திகழும் ஜப்பானில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக அங்கு புதிதாக பாதிப்புகள் அதிக அளவில் உறுதியாகி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக நாளொன்றுக்கு 200 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானதை தொடர்ந்து டோக்கியோ நகரில் அதிகபட்ச சிவப்பு எச்சரிக்கையை ஆளுநர் யுரிகோ …

Read More »

எல்லையில் இருந்து படைகளை விலக்க இந்திய – சீன பேச்சில் முடிவு.

இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் வகையில், இரு நாடுகளின் படைகளையும் முழுவதுமாக விலக்கி கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்த கட்டத்தில், லடாக்கில், கடந்த மாதம், 15ம் திகதி, நடந்த மோதலில், இந்திய .ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர் மரணமடைந்தனர். இதையடுத்து, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கடந்த, ஜூலை 5ம் திகதி, சீன வெளியுறவு …

Read More »

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களைத் துரத்தும் கொரோனா – ஒரே நாளில் இருவருக்கு தொற்று.

தமிழகத்தில், கோவை மாவட்ட ஆட்சியரை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சிவில் அதிகாரிகள் என எவரையும் விட்டு வைக்காமல் கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது. நேற்றுக் காலை கோவை மாவட்ட ஆட்சியர். ராஜாமணிக்கு கொரோனா  உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். கோவை …

Read More »

அமெரிக்காவுக்கு உளவுத் தகவல்களை வழங்கியவரை தூக்கிலிட்டது ஈரான்.

அமெரிக்காவின் சிஐஏ புலனாய்வு அமைப்புக்கு இரகசிய தகவல்களை வழங்கினார் என்று குற்றம்சாட்டப்பட்ட ஈரானியர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானுக்கு அமெரிக்காவும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக தங்களின் அணு ஆயுத தயாரிப்பை தடுத்து நிறுத்த முயற்சி செய்வதாக அமெரிக்கா மீது ஈரான் பகிரங்க குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. ஈரானின் புரட்சிப்படை தளபதியான சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார். …

Read More »

ஜனதா கட்சியின் தலைவர் ரவீந்திரா ரெய்னாவுக்கு கொரோனா.

இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ரவீந்திரா ரெய்னாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திரா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். காஷ்மீரில் கடந்த சில வாரங்களுக்கு முன் பாரதீய ஜனதா கட்சி .பிரமுகர் வாசிம்பாரி உள்ளிட்ட மூன்று பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங், பாரதீய ஜனதா …

Read More »

இராணுவ அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

இந்திய இராணுவத்தில் பணியாற்றுவோர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக இராணுவ அதிகாரி ஒருவர், புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சீனாவை சேர்ந்த அலைபேசி செயலி நிறுவனங்கள், தங்கள் பயனாளர்கள் குறித்த தகவல்களை, சீன அரசுக்கு அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து,டிக்டாக் உள்ளிட்ட, 59 செயலிகளுக்கு, இந்திய மத்திய அரசு தடை விதித்தது. அத்துடன், இந்திய இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுடன், சமூக …

Read More »

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து முடக்கம்.

தமிழகத்தில் இந்த மாதம் முழுவதும் பொதுப் போக்குவரத்து சேவைகள் முற்றாக முடக்கப்பட்டிருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நடைமுறையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பொதுப்போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து நிறுத்தத்தை மேலும் நீடித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநிலத்தில் …

Read More »