Tuesday , September 29 2020
Breaking News

உலகம்

நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி, இந்தியாவுக்கு எதிராக கருத்து.

அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது, ராமபிரான் ஒரு நேபாளி என்று நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தெரிவித்துள்ளார். நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். நேபாளத்தில் கொரோனா வைரசை பரப்பியது இந்தியா தான் என்றும், தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா சதி செய்கிறது என்றும் அவர் குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் இந்தியாவின் சில …

Read More »

ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் டுடா வெற்றி.

போலந்து நாட்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் டுடா வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவாளரான ஆண்ட்ரெஸ் டுடா 51.21 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வார்சோ நகர மேயரான ரவால் டிராஸ்கோவ்ஸ்கியை, 2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இந்த தேர்தலில் அதே நேரம் 49 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள ரவால் டிராஸ்கோவ்ஸ்கி பலம் வாய்ந்த எதிர்கட்சி …

Read More »

3,000 மருத்துவ பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

உலகளவில் இதுவரை 3,000 மருத்துவ பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இது குறைந்த பட்ச எண்ணிக்கை மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ள, சர்வதேச மன்னிப்புச் சபை பல நாடுகள் மருத்துவ பணியாளர்களின் இறப்பு எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அந்த நாடுகளும் அறிவித்தால், பலியானோர் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தங்களிடம் பதிவான விபரங்களின் அடிப்படையில் ரஷ்யாவில் அதிகபட்சமாக 545 பேரும், …

Read More »

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைகிறது – ஏனைய மாவட்டங்களில் அதிகரிப்பு.

தமிழகத்தில், தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ள நிலையில் ஏனைய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதும், சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று 10வது நாளாக 2 ஆயிரத்திற்கு குறைவான பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,573 …

Read More »

அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

சீனாவின் வுகான் நகரில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.  தற்போது கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது.  இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,528 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,528 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இந்தக் காலப்பகுதியில் …

Read More »

உக்ரைன் பயணிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் உக்ரைன் பயணிகள் விமானம்  ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு, தமது வான் பாதுகாப்பு பிரிவின் ரேடார் வடிவமைப்பில் ஏற்பட்ட தவறே காரணம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 8ஆம் திகதி உக்ரைன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் 176 பயணிகளுடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து, உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி புறப்பட்டது. சில நிமிடங்களிலேயே அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது, இந்த விபத்தில் விமானத்தில் …

Read More »

அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் தீப்பற்று.

அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டதை அடுத்து,பற்றி எரிந்து கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சண்டியாகோ கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த USS Bonhomme Richard  என்ற அமெரிக்கப் போர்க்கப்பலிலேயே வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கப்பலுக்குள் தீபரவியுள்ளது. இதனால், கப்பலுக்கு வெளியே பெரும் புகை வந்து கொண்டிருக்கிறது. இந்த தீவிபத்தில் 11 கடற்படையினரும், தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 4 பேருமாக 21 பேர் காயமடைந்துள்ளனர் என்று …

Read More »

தெலங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் கொரோனா.

இந்தியாவின் தெலங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவியுள்ள போதிலும், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தெலங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்கள் மற்றும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் ஐதராபாத் எஸ்.ஆர்.நகரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மாநில ஆளுநர் மருத்துவர் …

Read More »

ராஜஸ்தானில் முதல்வருக்கு எதிராக துணை முதல்வர் போர்க்கொடி – காங்கிரஸ் ஆட்சி கவிழும் ஆபத்து.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள துணை முதல்வர் சச்சின் பைலட், பாரதீய ஜனதா கட்சி பக்கம் தாவ்வுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளனர். துணை முதல்வர் சச்சின் பைலட் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்,ஏ,க்களுடன் தற்போது டில்லியில் தங்கியுள்ளார். இவர் பைலட் பாரதீய ஜனதா கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரை சமாதானப்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் மேலிட …

Read More »

தென்னாபிரிக்காவில் தேவாலயம் ஒன்றில் தாக்குதல்………

தென்னாபிரிக்காவில் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. தென்னாபிரிக்காவின் தலைநகரால் ஜொஹனஸ்பேர்க்கில் உள்ள தேவாலயம் ஒன்றின் தலைமை தொடர்பாக எழுந்த பிரச்சினைகளை அடுத்து, சுமார் 40 பேர் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர்கள் மீது, நேற்றுக்காலை குறித்த தேவாலயத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களைக் கொண்ட ஒரு குழுவினர் திடீர் …

Read More »