Wednesday , September 30 2020
Breaking News

உலகம்

ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலி…….

சிரியாவின் கிழக்குப் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சர்வதேச ஊடகங்கள் சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இதில், இரண்டு மூத்த தளபதிகள் உள்ளிட்ட 35 பேர் பலியாகினர் என்றும் குறிப்பிட்டுள்ளன. இந்த விமானத் தாக்குதலை யார் நடத்தியது என்று இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும் …

Read More »

பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது.

பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் 24 மணி நேரத்தில் 1,214 பேர் கொரானா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேவேளை, புதிதாக நேற்று ஒரே நாளில் 45 ஆயிரத்து 48 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து, அங்கு கொரோனா …

Read More »

நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று – ஹிந்தி திரையுலகம் அதிர்ச்சி.

இந்தியாவில், ஹிந்தி திரையுலகத்தின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். “கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதை தொடர்ந்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் கடந்த 10 நாளில் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனை செய்து …

Read More »

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது ஆளும் கட்சி.

சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும்கட்சி 83 ஆசனங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூரில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்தபடி மக்கள் பாதுகாப்பாக வாக்களித்தனர். பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் நடவடிக்கை கட்சி அரசாங்கத்தின் பதவிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே இந்த தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. …

Read More »

அமெரிக்காவிடம் வாங்கிய அப்பாச்சி ஹெலிகளை, லடாக் எல்லையில் களமிறக்கியது இந்தியா.

அமெரிக்காவிடமிருந்து அண்மையில் வாங்கிய, அப்பாச்சி, மற்றும் சினுாக் ரக ஹெலிகொப்டர்களை, இந்திய விமானப்படை லடாக் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அமெரிக்காவின், போயிங் நிறுவனத்திடமிருந்து, வாங்கப்பட்ட, 17 அப்பாச்சி ரக ஹெலிகொப்டர்களும், 15 சினுாக் ரக ஹெலிகொப்டர்களும், கடந்த ஆண்டு, இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. அப்பாச்சி ஹெலிகொப்டர்கள், மி.மீ ஹைட்ரா ரொக்கெட் மற்றும் ஸ்டிங்கர் ஏவுகணைகளை தாங்கிச் சென்று, தாக்கும் திறன் கொண்டது. அண்மையில் லடாக் எல்லையில், சீன இராணுவத்தின் …

Read More »

24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, நேற்றுக் காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில், 24 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் 6,603 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். தமிழகத்தில் 3,756 பேரும், கர்நாடகாவில் 2,062 பேரும், டெல்லியில் …

Read More »

பாடசாலைகளை திறக்காவிட்டால், மாகாணங்களுக்கான நிதி துண்டிக்கப்படும்

அமெரிக்காவில், பாடசாலைகளை திறக்காவிட்டால், மாகாணங்களுக்கான நிதி துண்டிக்கப்படும் என, ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில், கொரோனா அச்சுறுத்தலை மீறி, பாடசாலை மற்றும் கல்லுாரிகளை திறக்குமாறு, மாகாண அரசுகளுக்கு, ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார். இந்தநிலையில், பாடசாலைகள் திறப்பு குறித்து, நேற்று, அவர், ‘டுவிட்டர்‘ வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே உள்ளிட்ட நாடுகளில், எந்த பிரச்சினையும் இல்லாமல், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இங்கு, பாடசாலைகள் மீண்டும் …

Read More »

இந்திய இராணுவத்தினர் 89 செயலிகளைப் பயன்படுத்த தடை.

இந்திய இராணுவத்தினர், 89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை இந்திய இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பு தகவல்கள் திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதால் இந்திய இராணுவம், தடை செய்யப்பட்ட செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ட்ரூகாலர் வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி …

Read More »

லடாக்கில் இந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதல்.

லடாக்கில் இந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதல்களை அடுத்து, இந்தோ-திபெத் படையினரை எல்லையில் நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை தொடர்ந்து இந்தியா-சீனா இடையிலான, 3,488 கி.மீ. நீள எல்லையில், தீவிர கண்காணிப்பை மேற்கொள்வதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக இந்தோ-திபெத் படையினரை எல்லையில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மலைப்பாங்கான பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் திறன் பெற்ற இந்த …

Read More »

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது…

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு, சீனா சார்பு நிலையில் உள்ளதால் அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்வதாக கடந்த மே மாதம், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார். அந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும், அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்றும் …

Read More »