Wednesday , September 30 2020
Breaking News

உலகம்

எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரானிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் – அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகே எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரானிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளதா அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீரென விலகிக்கொண்டதில் இருந்து, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும்  இடையே பதற்றம் நிலவி வருகிறது. மத்திய கிழக்கு பகுதியில், குறிப்பாக பாரசீக வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்களை ஈரான் இலக்காக கொண்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகே லைபீரிய கொடியுடன் பயணித்த …

Read More »

ரஷ்ய துணை பிரதமர் யூரி ட்ரூனோவ், கொரோனா தொற்றால் பாதிப்பு.

ரஷ்ய துணை பிரதமர் யூரி ட்ரூனோவ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பிரதமர் மிகெய்ல் மிஷுஸ்டின்,  நாட்டின் கிழக்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில், ரஷ்ய துணை பிரதமர் யூரி ட்ரூனோவ்வும்,  இணைந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். பயணம் மேற்கொள்ளும் முன்னதாக  துணை பிரதமர் யூரி ட்ரூனோவ்வுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது பயணம் ஒத்தி …

Read More »

லெபனானில் அவசரகால நிலை – இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கியது நாடாளுமன்றம்.

லெபனான் அரசு பதவி விலகியுள்ள நிலையில், பெய்ரூட்டில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இராணுவத்திற்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 தொன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து, கடந்த 4-ம்திகதி வெடித்துச் சிதறியதில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.   இந்த வெடிவிபத்தில் 3,0 இலட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். உலக வரலாற்றில் நடைபெற்ற மிக …

Read More »

இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 3 பேர் கைது.

சட்டவிரோதமாக இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 3 பேரை தமிழகப் பொலி்சார் கைது செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மதுரை மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி ஊடகப் பயணம் மேற்கொண்ட இலங்கைத் தமிழ் அகதிகள் நான்கு பேரை பொலி்சார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர்களில் 3 பேர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அல்பேர்ட், கபிரியல் கிரீட் லோட்டஸ், கனகசபை …

Read More »

கோமா நிலையில் பிரணாப் முகர்ஜி – இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என மகன் அறிவிப்பு.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட்டும், அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்த சச்சின் பைலட்டும், நேரில் சந்தித்து  இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதை அடுத்து, மாநில அரசியலில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த சச்சின் பைலட் 18 எம்.எல்.ஏ.க்களுடன் போர்க்கொடி தூக்கி நெருக்கடி கொடுத்து வந்தார். இதனால் கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தான் அரசியலில் குழப்பமான சூழ்நிலை காணப்பட்டது. …

Read More »

துணை ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஜோ பிடன் அறிவித்திருப்பது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன் – கமலா ஹாரிஸ்

துணை ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஜோ பிடன் அறிவித்திருப்பது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன் என தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கி இருக்கிறார். ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு …

Read More »

பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த கடனுதவி மற்றும் மசகு எண்ணெய் உதவிகளை நிறுத்திக் கொள்வதாக  சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த கடனுதவி மற்றும் மசகு எண்ணெய் உதவிகளை நிறுத்திக் கொள்வதாக  சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான  நட்புறவு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அரசுமுறை பயணமாக பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டு அரசுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். பாகிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட 6.2 பில்லியன் டொலர் மதிப்பிலான அந்த சலுகையில் …

Read More »

உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் பாதிப்பு, 6 வாரங்களில் இரண்டு மடங்காக அதிகரிப்பு

உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் பாதிப்பு, 6 வாரங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவின் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில், முதன்முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதற்குப் பின்னர், கிட்டத்தட்ட 8 மாத காலத்தில் உலகின் 200-க்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதுவரை உலக அளவில் மொத்தம் 2 கோடி 3 லட்சத்து 18 ஆயிரத்து 226 பேருக்கு தொற்று பாதிப்பு …

Read More »

இந்தியாவின் சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது

இந்தியாவின் சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 15 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்வரும் சனிக்கிழமை நாடு முழுவதும் இந்திய …

Read More »

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் – வி.பி.துரைசாமி

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என்று, அந்தக் கட்சியின் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் நேற்று பாரதீய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,  தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். பாஜகவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும்.என்று …

Read More »