Wednesday , September 30 2020
Breaking News

உலகம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடம்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மூளையில் ரத்த கட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர். 84 வயதுடைய, முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 10ம் திகதி, டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்துடன், அவரது மூளையில், ரத்தக்கட்டு …

Read More »

கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக, ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவிப்பு

கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக, ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ள போதும், தடுப்பூசியின் கண்டுபிடிக்கப்பட்டதன் உண்மைத்தன்மை தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில்  வல்லரசு நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தடுப்பூசியை முதலில் யார் கண்டுபிடிப்பது என்பது தொடர்பாக, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. …

Read More »

வெள்ளை மாளிகைக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து, ஜனாதிபதி டிரம்ப் உடனடியாக வெளியேறிச் சென்றுள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து,  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து உடனடியாக வெளியேறிச் சென்றுள்ளார். வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் சுற்றித் திரிந்த ஒருவர் மீது இரகசிய சேவை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து …

Read More »

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்களைத் தரையிறக்குவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்களைத் தரையிறக்குவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. மலை மீது அமைந்துள்ள கோழிக்கோழி விமான நிலையம், ஆபத்தான டேபிள் ரொப் ஓடுபாதையைக் கொண்டது. கடந்த 7 ஆம் திகதி கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது, விபத்துக்குள்ளாகியதில், 18 பேர் உயிரிழந்தனர். ஓடுபாதையைக் கடந்து குழிக்குள் விழுந்த விமானம் இரண்டாக உடைந்திருந்த்து. எனினும், விமானம் தீப்பிடிக்காததால்,  …

Read More »

நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின் 4 பேருக்கு கொரோனா – ஆக்லாந்தில் ஊரடங்கு அமுல்.

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகத்தை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை, நியூசிலாந்து மிகத் திறமையாக கட்டுப்படுத்தியிருந்தது. பெப்ரவரி மாதம் நியூசிலாந்தில் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. ஊரடங்கை தீவிரமாக அமுல்படுத்தியதன் விளைவாக, நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. …

Read More »

ஆளும் பாரதீய ஜனதா கட்சி  அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி.

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில், ஆளும் பாரதீய ஜனதா கட்சி  அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைத் தழுவியுள்ளது. இதையடுத்து,  6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென பதவி விலகியுள்ளனர்.  இதையடுத்து அங்கு அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. மணிப்பூரில் 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ஏனைய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பாரதீய ஜனதா கட்சியே, ஆட்சி அமைத்தது. முதல்வராக …

Read More »

முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலைக்கிடமான நிலையில்

முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக  புதுடில்லி இராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று, இராணுவ மருத்துவமனை நேற்றிரவு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவை அடுத்து, புதுடில்லி இராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை …

Read More »

செனட் உறுப்பினர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு சீன அரசு தடை

அமெரிக்க செனட் உறுப்பினர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. ஹொங்கொங்கில் அரசியல் சுதந்திரத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சீன அதிகாரிகள் 11 பேருக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. அதற்கு பதிலடியாகவே, சீனா இந்த தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஹொங்கொங் தலைமை நிர்வாகி கேரி லாம் உள்ளிட்ட 11 பேருக்கு தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டிருந்தார். தடை விதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமாக …

Read More »

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா கொரோனா

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி இந்த தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வேறு காரணத்துக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த ஒரு வார காலத்தில் தன்னுடன் தொடர்பில் …

Read More »

முக கவசம் அணியாவிட்டால் 1000 ரூபா அபராதம்- குஜராத் அரசு உத்தரவு.

குஜராத்தில் பொது இடங்களில்முக கவசம்அணியாமல் சென்றால் 1000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குஜராத்தில் நோய் தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்த அமாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையிலேயே பொது இடத்தில்முக கவசம் அணியாமல் சென்றால் 1000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில …

Read More »