Monday , September 28 2020
Breaking News

உலகம்

டிக்டொக் செயலிக்கு தடைவிதித்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.

சீனாவின் டிக்டாக், வீசாட் ஆகிய செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, அவற்றுக்கு தடை விதித்துள்ளார் மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். இந்த தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் இருந்து அமுலுக்கு வரும் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவை அடுத்து அமெரிக்காவிலும் விரைவில் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்திருந்த நிலையில் தடை உத்தரவில் ஜனாதிபதி …

Read More »

கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவலை பதிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பதிவை, முதன் முறையாக பேஸ்புக் நீக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவலை பதிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பதிவை, முதன் முறையாக பேஸ்புக் நீக்கியுள்ளதுடன், அவரது தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கை முடக்கும் முடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கில், பொக்ஸ் நியூஸ் செய்தி சனலுக்கு அவர் அளித்த பேட்டியின் வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதில், குழந்தைகளுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உள்ளதால், பள்ளிகள் திறக்கலாம் என தெரிவித்திருந்தார். மேலும், குழந்தைகளுக்கு கொரோனா …

Read More »

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பாரிய குண்டுவெடிப்பில் அழிவுகளைச் சந்தித்த பகுதிகளை பிரான்ஸ் ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பாரிய குண்டுவெடிப்பில் அழிவுகளைச் சந்தித்த பகுதிகளை பிரான்ஸ் ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார். பெய்ரூட் குண்டுவெடிப்பில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். 5000 பேர் காயமைடைந்துள்ளனர்.மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லெபனானின் நட்பு நாடான பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரான் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறியுள்ளார். பெய்ரூட் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர். மேலும் மக்களின் வாழ்வாதாரத்தை சீராக்க லெபனானின் நட்பு நாடான பிரான்ஸ் …

Read More »

ராமர் கோவில் பூமி பூஜையை அடுத்து அசாமில் இனக்கலவரம் வெடித்தது.

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு அசாமில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியைத் தொடர்ந்து இனக்கலவரம் வெடித்துள்ளது. இதையடுத்து அங்கு காலவரயின்றி ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அயோத்தியில் ராமர் கோவில்கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்து அமைப்புகள் வெற்றிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அசாம் மாநிலத்திலும் இந்த விழா கொண்டாடப்பட்ட போது ஏற்பட்ட மோதல் …

Read More »

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கர வெடி விபத்து.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கர வெடி விபத்தினால், 3 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்று பெய்ரூட் ஆளுநர் மார்வான் அப்போத் தெரிவித்துள்ளார். வெடிவிபத்தை அடுத்து லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவோன் நேற்று அவசர அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி, 2 வார காலத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை பெய்ரூட் வெடிவிபத்தினால், லெபனானில் நடந்த போர்களை விட அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை …

Read More »

கருணாஸ் மற்றும் பவுன்ராஜ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று.

தமிழகத்தில் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பலரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில் திண்டுக்கல்லில் தங்கியுள்ள திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதியான …

Read More »

லடாக் எல்லையில் இருந்து சீனா தனது படைகளை விலக்கிக் கொள்ளவில்லை – இந்திய  எல்லையில் பதற்றம்.

இராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்களுக்குப் பின்னரும்,  லடாக் எல்லையில் இருந்து சீனா தனது படைகளை விலக்கிக் கொள்ளாததால், இந்திய  எல்லையில் பதற்றம் நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்னை மோசமடைந்து வருகிறது. இரண்டு நாடுகளின் இராணுவத்தினரும் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து, அங்கு  பெருமளவு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பல கட்டங்களாக, பல்வேறு மட்டங்களிலும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன்பின்னரும், பாங்காங், தேப்சாங், …

Read More »

மும்பையில் 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொட்டித் தீர்த்த கடும் மழை.

மும்பையில் 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொட்டித் தீர்த்த கடும் மழையால் நகரின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், மும்பையில் ஓகஸ்ட் 8ம் திகதி வரை கடும்மழை கொட்டும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று மும்பையில் 10 மணி நேரத்தில் 250 மி.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து …

Read More »

இந்திய சுதந்திர தினமான எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் திகதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து.

இந்திய சுதந்திர தினமான எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் திகதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ம் திகதி இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மருத்துவமனையின் மருத்துவர் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. …

Read More »

ஆப்கானிஸ்தானில், சிறைச்சாலை ஒன்றுக்குள் நுழைந்த ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் 20 மணி நேரமாக நடந்த மோதல் – 29 பேர் உயிரிழந்திருப்பதாக செய்தி

ஆப்கானிஸ்தானில், சிறைச்சாலை ஒன்றுக்குள் நுழைந்த ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் 20 மணி நேரமாக நடந்த மோதல்களில், பயங்கரவாதிகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானின் நங்கஹர் மாகாணத்தில் உள்ள ஜலலாபாத் சிறைச்சாலையை நேற்று முன்தினம் மாலை 6.30 மணி முதல் ஐஎஸ் பயங்கரவாதிகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த மோதல்கள் நேற்று மாலை வரை இடம்பெற்றன. இதன்போது தக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் எட்டுப் பேரும், தலிபான் கைதிகள், சிறை …

Read More »