Monday , September 28 2020
Breaking News

உலகம்

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு.

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, வடக்கு லடாக்கில் இந்தியா படைகளை குவித்து எல்லைப்பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தி வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா – சீனா இடையே, கடந்த சில மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வரும் நிலையல், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இரு தரப்பு இராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இரு நாடுகளும், தமது தங்கள் படைகளை, …

Read More »

அங்கொட லொக்கா எனப்படும் இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனின் மரணம் – சிபிசிஐடி விசாரணை

கோவையில் மரணமான அங்கொட லொக்கா எனப்படும் இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனின் மரணம் தொடர்பான, விசாரணைகள் சிபிசிஐடி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கொட லொக்கா, இலங்கையில் பிரபல ரவுடியாகவும், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகவும் வலம் வந்தவர். கொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்ட அவர் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று கடந்த 2018ம் ஆண்டு தொடக்கம் கோவையில் வசித்து வந்துள்ளார். இவருடன் இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, என்ற பெண் …

Read More »

ஈரானின் ஷிராஸ் நகரில், கடந்த 2008-ம் ஆண்டு குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய ஒருவர் கைது.

ஈரானின் ஷிராஸ் நகரில், கடந்த 2008-ம் ஆண்டு குண்டுத் தாக்குதல் நடத்திய அமெரிக்க பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானில் பயங்கரவாத செயல்களை ஈடுபட்டு வந்த ஜம்ஷிட் ஷர்ம்ஹாட் என்ற பயங்கரவாதி அவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிங்டம் அசம்பிளி ஆஃப் ஈரான் என்னும் இவரது அமைப்பு தொடர்ந்து ஈரான் அரசுக்கு எதிராகப் போராடி வந்தது. ஈரானில் உள்நாட்டு கலவரத்தை தூண்டும் விதத்தில் இந்த பயங்கரவாத …

Read More »

அமெரிக்காவில் கொரோனா வைரசை கையாளுவதில் ஜனாதிபதி ட்ரம்ப் தோல்வியடைந்து விட்டார் – அமெரிக்கர்கள் கருத்து.

அமெரிக்காவில் கொரோனா வைரசை கையாளுவதில் ஜனாதிபதி ட்ரம்ப் தோல்வியடைந்து விட்டார் என்று மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவில் 50 இலட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 2 இலட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தை ட்ரம்ப் கையாளும் விதம் குறித்து …

Read More »

போலி ஆவணங்களின் மூலம், அங்கொட லொக்காவின் சடலத்தை எரித்த இரண்டு பெண்கள் கைது.

போலி ஆவணங்களின் மூலம், அங்கொட லொக்காவின் சடலத்தை எரித்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரை கோயம்புத்தூர் பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி என்பவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என, பீளமேடு பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையையும் வழங்கியுள்ளார். இதையடுத்து …

Read More »

உலக கிண்ண விவாதப் போட்டியில் கனடாவிடம் தோல்வியடைந்தது இலங்கை அணி

உலக கிண்ண பாடசாலை விவாத இறுதிப் போட்டியில், கனடாவுடன் மோதிய இலங்கையின் தேசிய விவாத அணி 8-1 என்ற அடிப்படையில், தோல்வியடைந்துள்ளது. அரையிறுதிப் போட்டியில் அயர்லாந்து அணியை 7-0 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டு, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இலங்கை அணி, உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 7 மணியளவில், கனடா அணியுடன் மோதியது. கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்களான சாலெம் சுமந்திரன், ஜானுவல் டி சில்வா ஆகியோரும், …

Read More »

அமெரிக்கவில் தரையிறக்க வாகனம் கடலில் மூழ்கி 8 மரைன் படையினர் பலி.

அமெரிக்காவின் கலிபோர்னியா கடல் பகுதியில் இராணுவப் பயிற்சி ஒன்றின் போது, ஏற்பட்ட விபத்தில் ஏழு அமெரிக்க மரைன் படையினரும் மாலுமி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தரையிறக்க தாக்குதல் வாகனம் ஒன்று கடந்த வியாழக்கிழமை கடலில் மூழ்கி இந்த விபத்து ஏற்பட்டது, 40 மணி நேரம் நடத்தப்பட்ட தேடுதல்களை அடுத்து அதில் இருந்த ஏழு அமெரிக்க மரைன் படையினரும் மாலுமி ஒருவரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க இராணுவம் …

Read More »

இந்திய அரசியல் தலைவர்களை துரத்தும் கொரோனா – அமித் ஷா, எடியூரப்பா, தமிழக ஆளுநருக்கும் தொற்று.

இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சர், கர்நாடக மாநில முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. கர்நாடக முதல்வரும், பாஜகவின் முக்கிய தலைவருமான எடியூரப்பாவுக்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா …

Read More »

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஜெர்மனி தலைநகர் பெர்லினில் போராட்டம்

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனி தலைநகர் பெர்லினில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சில நாட்களாக தொற்று மேலும் பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளுடன் பொதுமக்கள் பெர்லினில் உள்ள பிரான்ட்பர்க் கேட்டிலிருந்து டியர்கார்டன் பார்க் வரை பேரணி நடத்தினர். இதில் பங்கேற்ற ஒரு சிலர் …

Read More »

ஊழல் ஒழிந்தால் தான் நான் முக கவசம் அணிவேன் என மெக்சிகோ ஜனாதிபதி லோபஸ் ஓபரேடர் தெரிவித்துள்ளார்.

ஊழல் ஒழிந்தால் தான் நான் முக கவசம் அணிவேன் என மெக்சிகோ ஜனாதிபதி லோபஸ் ஓபரேடர் தெரிவித்துள்ளார். நோய்த் தொற்று மேலும் பரவாமல் இருக்க சமூக விலகல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் கடைப்பிடித்து வருகின்றன. எனினும் சில நாடுகளின் தலைவர்கள் முக கவசம் அணிவதற்கு மறுத்து வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் இது நிலைப்பாட்டில் இருந்த போதும் அண்மையில் அவரும் முக்கவசம் அணிய ஆரம்பித்துள்ளார். …

Read More »