Tuesday , September 29 2020
Breaking News

உலகம்

இந்தியாவில் வெளிநாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து, சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், புதிய கல்விக் கொள்கையில் விருப்பத் தேர்வான வெளிநாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து, சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட உள்ளது. இதில் விருப்ப மொழித் தேர்வாக இந்திய மொழிகள் பலவும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதேபோல் வெளிநாட்டு மொழிகளான கொரியன், ஜப்பான், தாய், பிரென்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், போர்த்துகீஸ், ரஷ்யன் மொழிகளும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கடந்த 2019-ம் …

Read More »

இலங்கை உள்ளிட்ட 31 நாடுகளை அதிக ஆபத்துள்ள நாடுகளாக பிரகடனம் செய்துள்ள குவைத்.

இலங்கை உள்ளிட்ட 31 நாடுகளை அதிக ஆபத்துள்ள நாடுகளாக பிரகடனம் செய்துள்ள குவைத், இந்த நாடுகளில் இருந்து பயணிகள் விமானப் போக்குவரத்துகளை முற்றாக தடை செய்துள்ளது. குவைத் நாட்டின் சிவில் விமான போக்குவரத்துப் பணியகத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள கொரோனா தொடர்பான அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பிலிப்பைன்ஸ், லெபனான், சீனா, ஈரான், மெக்சிகோ, ஈரான், ஈராக்,பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் அதிக ஆபத்துள்ள …

Read More »

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், தமிழ் மொழியிலும் பிரசாரம் செய்ய திட்டம்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பிடன், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 14 இந்திய மொழிகளில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் வரும் நொவம்பர் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில், …

Read More »

இந்தியாவில் கோவாக்சின் தடுப்பு மருந்து செலுத்தியவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியான, கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்ட அனைவரும், நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்கும் பரிசோதனையில் தீவிரமாக உள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய …

Read More »

ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனைகள் தொடர்பாக அமெரிக்காவுடன் இனி பேச்சுக்களும் நடத்தப் போவதில்லை.

ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனைகள் தொடர்பாக அமெரிக்காவுடன் இனி பேச்சுக்களும் நடத்தப் போவதில்லை என, ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி தெரிவித்துள்ளார். அணு ஆயுதச் சோதனை தொடர்பாக, அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் தெஹ்ரானில் கருத்து வெளியிட்ட ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் ஈரானின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்று கூறியுள்ளார். சர்வதேச …

Read More »

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவியில் 7000 மாணவிகள் கா்ப்பமாகியுள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவியில் கொரோனா ஊரடங்கு அமுலில் இருந்த கடந்த 5 மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்ட நேரத்தில் 7000 மாணவிகள் கா்ப்பமாகியுள்ளனர் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க உலகில் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மலாவியிலும் கொரோனா பரவியதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டது. ஊரடங்கு அமுலில் இருந்த கடந்த 5 மாதங்களிலும், …

Read More »

வியட்நாமில், முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில், முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்றினால், 70 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 90 மில்லியன் சனத்தொகை கொண்ட வியட்நாம், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. இங்கு கடந்த 99 நாட்களாக யாரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை. நேற்று அங்கு 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வியட்நாமின் ஹோய் நான் பகுதியில், கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த …

Read More »

டெல்லியில் ஊரடங்கு தளர்வை அறிவித்த முதல்வர் – ஆளுநர் அனுமதி மறுத்ததால் மோதல்.

டெல்லியில் மூன்றாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தும் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவுக்கு, மாநில ஆளுநர் ஒப்பதல் வழங்க மறுத்துள்ளதால் மோதல் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கில் இன்று முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 'மெட்ரோ' ரயில், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான கூடங்கள், கலை அரங்கங்கள் இயங்காது. அரசியல், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சமூக,- கலாச்சார கூட்டங்களுக்கான தடை உத்தரவு தொடரும் என்று …

Read More »

சென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கான தடை

சென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கான தடை வருவதற்கு ஓகஸ்ட் 15-ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அதையடுத்து,, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் உள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடம் வகிக்கிறது. சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. …

Read More »

மக்கள் இனி கொரோனாவுடன் தான் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் – உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்

மக்கள் இனி கொரோனாவுடன் தான் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார். சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவில் இரண்டு கோடியை எட்டும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, 6 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் இதுவரை இந்த தொற்றினால் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஜெனிவா நகரில் வீடியோ …

Read More »