Tuesday , September 29 2020
Breaking News

உலகம்

தென் சீன கடற்பகுதியில் சீனா தீவிர இராணுவ பயிற்சியில் ஈடுபட்டது.

தென் சீன கடற்பகுதியில் சீனா தீவிர இராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன பாதுகாப்புத்துறை பேச்சாளர் ரென் குவோகியாங் சீனா தனது இராணுவ பலத்தை அதிகரித்துள்ளதானது, பல நாடுகளை நிம்மதி இழக்கச் செய்துள்ளது என்று கூறியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை ஆசிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. சீனாவின் எச்-6ஜி மற்றும் எச்-6ஜே ஜெட் போர் விமானங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. மேலே பாய்தல், தரை இறங்குதல், …

Read More »

செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவும் விண்கலத்தை ஏவியது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நிறுவனம், செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை ஏவி உள்ளது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கானவேரல் ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. செவ்வாய் கிரகம் இம்மாதம் பூமிக்கு மிக அருகில் வர உள்ளதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவும் விண்கலத்தை செலுத்தி உள்ளது. அட்லாஸ் 5 என்ற ரொக்கட் மூலம் பிரிசெர்வென்ஸ் என்று …

Read More »

இராணுவத் தளபாட கொள்வனவு ஒப்பந்தத்தில் நிகழ்ந்த ஊழல்.

இராணுவத் தளபாட கொள்வனவு ஒப்பந்தத்தில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக, சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி உள்ளிட்ட 4 பேருக்கு புதுடில்லி உயர்நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இராணுவ ஒப்பந்தத்தில் இராணுவத்திற்கு ஆயுதங்கள் மற்றும் தளபாடங்கள் வாங்கியதில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக, டெகல்கா.கொம் என்ற இணைய தளம் அம்பலப்படுத்தியிருந்தது. இதனடிப்படையில் சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி மற்றும் …

Read More »

வளர்ச்சிக்கான நல்லுறவு என்ற பெயரில், ஒரு நாடு, மற்றொரு நாட்டை சார்ந்திருக்க நிர்பந்திக்கப்படுகிறது – இந்தியப் பிரதமர் குற்றச்சாட்டு.

வளர்ச்சிக்கான நல்லுறவு என்ற பெயரில், ஒரு நாடு, மற்றொரு நாட்டை சார்ந்து இருக்க நிர்பந்திக்கப்படுவதாக தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எனினும் நல்லுறவு பாராட்டும் நாடுகளை மதிப்பதே, இந்தியாவை அடிப்படை கொள்கையாக பின்பற்றப்படுகிறது என்று கூறியுள்ளார். மொரீஷியசில், புதிதாக கட்டப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர்,வீடியோ கொன்பஓட்டங்ஸ் மூலம் நேற்று திறந்து வைத்தனர். அந்த நிகழ்வில் உரையாற்றிய …

Read More »

சிங்கப்பூர் அமைச்சரவை அறிவிப்பு – ஐந்து தமிழர்களும் இடம்பிடித்தனர்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் புதிய அமைச்சரவையை நேற்று அறிவித்துள்ளார். இதில் ஐந்து தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். சிங்கப்பூரில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி 83 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், புதிய அமைச்சரவை தொடர்பான விபரங்களை பிரதமர் லீ சியன் லூங் நேற்று வெளியிட்டார். இதில் மூந்து தமிழர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. தர்மன் சண்முகரத்னம் மூத்த …

Read More »

576 கோடி ரூபா ரபேல் போர் விமானத்தை 1670 கோடி ரூபாவுக்கு வாங்கியது ஏன்? – இந்திய அரசிடம் ராகுல் காந்தி கேள்வி

576 கோடி ரூபா மதிப்புள்ள ரபேல் போர் விமானத்தை 1670 கோடி ரூபாவுக்கு ஏன் வாங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்களில் முதல் கட்டமாக 5 விமானங்கள் நேற்று இந்தியாவை வந்தடைந்துள்ளன. ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வாழ்த்து …

Read More »

ஸ்பெயினுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஜெர்மனி அரசு, மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஸ்பெயினுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஜெர்மனி அரசு, தனது நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. ஜெர்மனியில் சில இடங்களில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஜெர்மனி அரசு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஸ்பெயினுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஜெர்மனி அரசு தனது நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து ஜெர்மனி வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஸ்பெயினில் கேட்டலோனியா, அரகான், நவ்அர்ரா ஆகிய பகுதிகளில் …

Read More »

இனி இந்த பூமியில் போர் நடக்காது என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.

இனி இந்த பூமியில் போர் நடக்காது என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். கொரியாவுடனான போர் முடிவுக்கு கொண்டு வர ஏற்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதன் 67-வது ஆண்டு விழா வடகொரியாவில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், இந்த பூமியில் இனி போர் நடக்காது என்று கூறி வடகொரிய மக்களை ஆரவாரப்படுத்தியுள்ளார். வடகொரியா எதிரி நாடுகளிடம் இருந்து தன்னை …

Read More »

முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை.

முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. நஜிப் ரசாக் மலேசிய பிரதமராக இருந்த போது, 2015-ம் ஆண்டு அரசு முதலீட்டு நிதியான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபா ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனைகளின் போது, 273 …

Read More »

இன்றிரவு இந்தியா வரும் ரபேல் போர் விமானங்கள் – மெழுகுவர்த்தி ஏற்றி வரவேற்குமாறு கோரிக்கை.

பிரான்சிடம் கொள்வனவு செய்யப்பட்ட ரபேல் போர் விமானங்கள் இன்று இரவு இந்தியாவை வந்தடையவுள்ளன. இதனை முன்னிட்டு இந்த விமானங்களை தரையிறங்கவுள்ள ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமான நிலையத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்ட ஐந்து, ரபேல் போர் விமானங்களும், நேற்று முன்தினம் அங்கிருந்து புறப்பட்டன. 7,000 கி.மீ. தூரத்தை கடந்து, இன்று இரவு 7 மணிக்கும் 7.30 மணிக்கும் இடையில் இந்தியாவை …

Read More »