Monday , September 28 2020
Breaking News

உலகம்

இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் கையெழுத்திட்ட உடன்பாட்டுக்கு அமைய, 400 மில்லியன் நாணய மாற்று கடன் வசதியை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, 1 பில்லியன் டொலர்களை இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகிறது. .இதுதொடர்பாக, இந்தியாவின் றிசேவ் வங்கி அதிகாரிகளுடன், இலங்கை மத்திய வங்கி …

Read More »

சீனாவின், ஷாங்காய் நகருக்கு அருகே, இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் பறந்து சென்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின், ஷாங்காய் நகருக்கு மிக அருகே, இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் பறந்து சென்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று பரவத் துவங்கிய பின், அமெரிக்கா – சீனா இடையே, முரண்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. அமெரிக்காவில், ஹூஸ்டன் நகரில் உள்ள, சீன துாதரகத்தை, அமெரிக்கா சில நாட்களுக்கு முன்னர், அதிரடியாக மூடியது. இதற்கு பதிலடியாக, சீனாவின் செங்டு நகரில் உள்ள, அமெரிக்க துாதரகத்தை, சீனா மூட உத்தரவிட்டது. …

Read More »

புதிய வெட்டுக்கிளிக் கூட்டங்கள், இம்மாத இறுதியில் இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைய வாய்ப்பு

சோமாலியாவில் இருந்து புதிய வெட்டுக்கிளிக் கூட்டங்கள், இம்மாத இறுதியில் இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக இந்திய மத்திய அரசு எச்சரித்துள்ளது. குஜராத் கட்ச் மாவட்டத்தில் ஒரு இடத்திலும், ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர், பார்மர், ஜோத்பூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், 36 இடங்களிலும் நேற்றுமுன்தினம் இரவு, வெட்டுக்கிளி கூட்டத்திற்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இப்பகுதிகளில் முழுமையாக வளர்ச்சி பெறாத இளஞ்சிவப்பு வண்ண வெட்டுக்கிளிகளின் கூட்டங்கள், முழுமையாக …

Read More »

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு கீழ் 2000 அடி ஆழத்தில் புதைக்கப்படுகிறது ரைம் கப்சூல்.

அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் ராமர் ஜென்ம பூமியின் வராலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில், தற்போது கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு அடியில் 2000 அடி ஆழத்தில் கால மாத்திரை எனப்படும், ரைம் கப்சூல் ஒன்று புதைக்கப்படும் என ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது. ரைம் கப்சூல் புதைக்கப்படுவதால் எதிர்காலத்தில் ராமர் ஜென்ம பூமி குறித்து எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் தடுக்க முடியும் …

Read More »

துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள, சிரிய நகரத்தில் குண்டுவெடிப்பு.

துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள, சிரிய நகரத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போரின் போது குர்திஷ் போராளிகள் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பல்வேறு மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்சி நடத்தி வந்தனர். இந்த போராளிகள் குழுவை ஒழிக்க ரஷ்ய உதவியுடன் சிரியா பல ஆண்டுகளாக சண்டையிட்டது. இதற்கிடையில், சிரியாவில் செயற்பட்டு வந்த குர்திஷ் போராளிகளை பயங்கரவாதிகள் என …

Read More »

சீனா, பாகிஸ்தான் குறித்த பாதுகாப்புத் தகவல்களை இந்தியாவுக்கு கொடுக்கிறது எமிசாட் செயற்கைக்கோள்.

திபெத்தில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் நடமாட்டம் குறித்து, இந்தியா தனது எமிசாட் செயற்கை கோள் மூலம் தகவல்களைப் பெற்றுவருவதாக கூறப்படுகிறது. இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் இந்தியாவின் முதலாவது உளவு செயற்கை கோளான எமிசாட் கடந்த ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய இராணுவத்திற்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளும் பணியில் இந்த செயற்கைக் கோள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. அருணாசல …

Read More »

மரத்தடியில் நடந்த சட்டசபை கூட்டம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், சட்டசபையின் மைய மண்டபம் மூடப்பட்டதை அடுத்து, வரலாற்றில் முதன்முறையாக, மரத்தடியில் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபையின் வரவுசெலவுத் கூட்டத்தொடர் கடந்த 20ம்திகதி ஆரம்பமாகிய நிலையில், சட்டசபை கூட்டங்களில் பங்கேற்ற, பிரதான எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த உறுப்பினர் ஜெயபால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக, அவர் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, சட்டசபையின் மைய மண்டபத்தில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. …

Read More »

பிலிப்பைன்சில் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொருங்கியது.

பிலிப்பைன்சில் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொருங்கியதில் 4 படையினர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் உள்ள இசபெல்லா மாகாணத்தில் ஹவாயன் நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. இந்த ஹெலிகொப்டரில் 2 விமானிகள் உட்பட 5 இராணுவத்தின் பயணம் செய்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே அந்த ஹெலிகொப்டர் திடீரென விழுந்து நொருங்கியது. இந்த கோர விபத்தில் …

Read More »

ஆசனப் பட்டி அணியாமல், காரைச் செலுத்தியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பொலிசாரால், 100 ரூபா அபராதம்.

ஆசனப் பட்டி அணியாமல், காரைச் செலுத்தியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பொலிசாரால், 100 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்றைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ளவர்கள் ஏனைய மாவட்டங்களுக்கு செல்வதற்கு அரசிடம் முறையாக இ- பாஸ் பெற வேண்டும். திருமணம், இறப்பு மற்றும் அவசர மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே, இ – பாஸ் வழங்கப்படுகிறது. எனினும் நடிகர் ரஜினிகாந்த் அவரது பண்ணை …

Read More »

செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டது சீனா – பதிலடி நடவடிக்கைகளால் பதற்றம் அதிகரிப்பு.

ஹூஸ்டனில் உள்ள சீன துாதரகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டதற்குப் பதிலடியாக, செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு சீனா உத்தரவிட்டுள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் இன்னும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா வைரஸ் முதலில் பரவத் துவங்கிய நாடான சீனா மீது, அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த வைரஸ் பரவலின் மூலம், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு, சீனா பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் …

Read More »