Thursday , September 24 2020
Breaking News

உலகம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியிடம் 100 கேள்விகளை எழுப்பி திணறடித்த நீதிபதிகள்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்கே. அத்வானியிடம் நேற்று நீதிமன்றத்தில் நான்கரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவரிடம் நீதிபதிகளால் 100க்கு அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அயோத்தியில், 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட, …

Read More »

ஏவி டாங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஹெலிகொப்டரில் இருந்து ஏவி டாங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஒடிசா பாலசோரில் கடந்த 16 மற்றும் 17ஆம் திகதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. துருவஸ்ட்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை, ஹெலிகொப்டரில் பொருத்தப்பட்டு, டாங்கிகளை தாக்கி அழிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், பாலசோரில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஹெலிகொப்டரில் இருந்து சோதனை நடத்தப்படவில்லை. தரையில் இருந்தே சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்த …

Read More »

ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூடுமாறு அமெரிக்கா உத்தரவு.

ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ஹொங்கொங்கில் சீனாவின் பாதுகாப்பு சட்டங்களை அமுல்படுத்தியது, ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் மற்றும் தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்த நினைப்பது ஆகியவற்றால், சீனா மீது அமெரிக்கா ஆத்திரமடைந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் அறிவார்ந்த சொத்துரிமை மற்றும் தனிநபர் இரகசிய பாதுகாப்புக்காக ஹுஸ்டனில் உள்ள சீன துணை தூதரகத்தை மூட வேண்டும் என கூறி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. …

Read More »

ஓகஸ்ட் 5ஆம் திகதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மோடி.

இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை, எதிர்வரும் ஓகஸ்ட் 5ம் திகதி பிரதமர் நரேந்திர மோட நாட்டவுள்ளார் என்று, ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை பொருளாளர் தெரிவித்துள்ளார். அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஓகஸ்ட் 5ம் திகதி நடத்தப்படும் எனவும், பிரதமர் மோடி …

Read More »

புதன் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் திட்டம் ஆரம்பம்.

புதன் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தின் காலநிலை மற்றும் வானிலை தொடர்பில் ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த செய்மதி ஜப்பானிலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஜப்பானின் Tanegashima விண்வெளி தளத்திலிருந்து H2-A ரொக்கெட் ஒன்றினூடாக இந்த செய்மதி அனுப்பப்படவுள்ளது. இது புதன் கிரகத்தை சென்றடைவதற்கு 500 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டியுள்ளது. கடந்த வாரம் செய்மதியை அனுப்புவதற்கு மேட்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகளும் மோசமான …

Read More »

வட கொரியா தலைவர் கிம் ஜொங் உன் தலைமையில் உயர்மட்டபாதுகாப்புக் கூட்டம்

வட கொரியா தலைவர் கிம் ஜொங் உன் தலைமையில் உயர்மட்டபாதுகாப்புக் கூட்டம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இராணுவத்தின் திறனை உயர்த்துவது மற்றும் போர் தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகமான கே.என்.சி.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் உள்ள சிக்கலான நிலைமையை கருத்தில் கொண்டு வடகொரியா இராணுவத்தின் திறனை அதிகரிப்பது மற்றும் துருப்புகளை அணிதிரட்டுவதற்கான தயார் நிலை குறித்து …

Read More »

அசாமில், கடும் மழை காரணமாக, காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அசாமில், கடும் மழை காரணமாக, காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கிருந்த, ஒன்பது காண்டாமிருகங்கள் உள்ளிட்ட, 108 வன விலங்குகள், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. பிரம்மபுத்ரா நதியின் நீர்மட்டம், உயர்ந்துள்ளது. இதையடுத்து, 26 மாவட்டங்களில் உள்ள, 2,700 கிராமங்கள், முழுமையாக வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த, 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 1.17 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மழை …

Read More »

ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா – தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 63 வயதுடைய கிருஷ்ணகிரி தொகுதி, தி.மு.க., எம்.எல்.ஏ. செங்குட்டுவன், காய்ச்சலை அடுத்து ஓசூரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்குட்டுவனுக்கு ஏற்கனவே, இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேவேளை, வேலூர் …

Read More »

சீனாவில் கரைபுரண்டு பாயும் வெள்ளம் – நீரை வெளியேற்ற அணை குண்டு வைத்து தகர்ப்பு.

சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு 140 பேர் பலியாகி உள்ள நிலையில், மழை வெள்ளத்தை வெளியேற்றுவதற்காக அணை ஒன்றை அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்துள்ளனர். சீனாவில் கடந்த மாதத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக உன்னான், குவாங்ஜி, திபெத், குய்சோவ், அன்குய், ஜிலின், லியானிங் உள்ளிட்ட பிராந்தியங்கள் இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு மாதத்துக்கும் மேலாக விட்டு விட்டு கனமழை பெய்வதால் 400-க்கும் …

Read More »

ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரவ்கானி தெரிவித்துள்ளார்

ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரவ்கானி தெரிவித்துள்ளார். மேலும் 3.5 கோடி பேருக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர், ஈரானில் இதுவரை 2.6 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர் என்றும், இதுவரை 14,000 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஈரானில் இதுவரை 2இலட்சத்து 69 ஆயிரத்து …

Read More »