Wednesday , September 30 2020
Breaking News

அரசியல் கைதிகளை பிணையிலாவது விடுவியுங்கள் – ஜனாதிபதிக்கு மாவை சேனாதிராஜா கடிதம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 10 முதல் 24 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் சிறைகளில் பலவருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாவை சேனாதிராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தற்போது நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளின் உளநிலையையும், அவர்களது அடிப்படை மனித உரிமைகளையும் கருத்திற் கொண்ட வெளிநாடுகளைப் போன்று இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது சில சிறைக்கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனையோருக்கு தொற்றுப் பரவக்கூடிய ஆபத்துக்களும் காணப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையால் கைதிகள் உளவியல் ரீதியான அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கேனும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு அந்தக் கடிதத்தின் பிரதிகளை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கும் அனுப்பிவைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *