Monday , September 28 2020
Breaking News

தொற்றாளர்களுடன் தொடர்புடைய மேலும் நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரானா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் மேலும் பல
நூற்றுக்காணக்கானோர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொற்றாளர் ஒருவர் பங்கேற்றிருந்த கூட்டம் ஒன்றில் பங்கு பற்றிய குருநாகல் மற்றும் நிக்கவரெட்டிய பகுதிகளைச் சேர்ந்த 146 பேர் இரண்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், குண்டசாலைப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு தொற்றாளர்களுடன்
தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், 150 பேரை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குண்டசாலை தொற்றாளர் ஒருவருடன் தொடர்புடைய கேகாலையைச் சேர்ந்த சில குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மாத்தறை, அபரக்க,பகுதியில், மேலும் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *