Monday , September 28 2020
Breaking News

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் சாரா புலஸ்தினி உயிரிழக்கவில்லை – இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக தகவல்.

கடுவாப்பிட்டிய தேவாலய தற்கொலைக் குண்டுதாரியின் மனைவியான சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் கொல்லப்படவில்லை என்று அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறன்று கடுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவரின் மனைவியான, சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், கடந்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும், சாய்ந்த மருது குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட மரபணுக்கள், சாராவின் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட மரபணுக்களுடன் பொருந்தவில்லை என்று அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனவே சாய்ந்தமருது குண்டுவெடிப்புக்கு முன்னதாக சாரா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது. சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் குண்டுதாரிகளுடன் தொடர்புடைய 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மரபணுச் சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இவர்களில் சாரா இல்லை என்று தெரியவந்துள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணைகளை புலனாய்வு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் மறைந்திருந்து விட்டு சாரா படகு மூலம் கடந்த செப்ரெம்பர் மாதம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.

அவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு உடந்தையாகவும் உதவியாகவும் இருந்தவர் என்று சந்தேகிக்கப்படும் அவரது மாமாவான செல்வகுமார் தேவகுமார் என்பவரை, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடந்த 13ஆம் திகதி கைது செய்துள்ளனர்

.
இவரை 90 நாள் தடுப்புக்காவலில் வைத்துள்ள பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, சாரா வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு ஒன்றின் முகராகவும் தொழிற்பட்டிருக்கலாம் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *