Tuesday , September 29 2020
Breaking News

தனிமைப்படுத்தலில் உள்ள வாக்காளர்களுக்காக நடமாடும் வாக்களிப்பு.

தனிமைப்படுத்தலில் உள்ள வாக்காளர்களுக்காக நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பது குறித்து, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

எதிர்வரும் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அண்மையில் புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், 3000இற்கும அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ராஜாங்கனையில் மாத்திரம் 12 ஆயிரம் பேர் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க வசதிகளை செய்து கொடுப்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் இதுகுறித்து ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு சாதாரண வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்றும் மகிந்த தேசப்பிரிய கூறினார்.
எனவே, அதற்குப் பதிலாக நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதுபோல, தனிமைப்படுத்தலில் உள்ளஅஞ்சல் மூல வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு வேறொருள் நாளில் வாக்களிப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதேவேளை சுகாதார வழிகாட்டு முறைகள் வர்த்தமானியில் வெளியிடப்படாவிட்டால், ஓகஸ்ட் 5ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது ஆபத்தாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *