Monday , September 28 2020
Breaking News

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களைத் துரத்தும் கொரோனா – ஒரே நாளில் இருவருக்கு தொற்று.

தமிழகத்தில், கோவை மாவட்ட ஆட்சியரை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சிவில் அதிகாரிகள் என எவரையும் விட்டு வைக்காமல் கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது.

நேற்றுக் காலை கோவை மாவட்ட ஆட்சியர். ராஜாமணிக்கு கொரோனா  உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து அவர் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

அத்துடன் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 60 பேர் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு நேற்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களாக அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அடுத்தடுத்து மாவட்ட ஆட்சியர்கள் தொற்றுக்கு இலக்காகி வருவது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *