Thursday , September 24 2020
Breaking News

எல்லையில் இருந்து படைகளை விலக்க இந்திய – சீன பேச்சில் முடிவு.

இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் வகையில், இரு நாடுகளின் படைகளையும் முழுவதுமாக விலக்கி கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்த கட்டத்தில், லடாக்கில், கடந்த மாதம், 15ம் திகதி, நடந்த மோதலில், இந்திய .ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர் மரணமடைந்தனர்.

இதையடுத்து, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கடந்த, ஜூலை 5ம் திகதி, சீன வெளியுறவு அமைச்சர், வாங் யீ உடன், தொலைபேசியில் நடத்திய பேச்சுக்களை அடுத்து, கல்வான் பள்ளத்தாக்கு, ஹொட் ஸ்பிரிங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சீன படைகள், 2 கி.மீற்றருக்குப் பின்வாங்கிச் சென்றன.

இந்தநிலையில் இரு தரப்பு படைகளையும் முழுவதுமாக விலக்கிக் கொள்வது குறித்து இராணுவ படைத் தளபதிகள் தலைமையிலான, நான்காவது கூட்டம், லடாக்கின் சுஷுலில், நேற்று முன்தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை 15 மணி நேரம் நடைபெற்றது.

இதில் இரு நாடுகளும் ஒப்புக் கொள்ளும் வகையில், கண்காணித்து உறுதி செய்யும் வகையில், படைகளை விலக்கிக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *