Monday , September 28 2020
Breaking News

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதும் 2வது டெஸ்ட், மான்செஸ்டர் ஒல்டு ட்ரபோர்ட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

சவுதாம்ப்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது.

முதல் டெஸ்டில் கப்ரியல், ஹோல்டர் ஆகியோரின் அபார பந்துவீச்சு இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலைய வைத்தது.

2வது இன்னிங்சில் பிளாக்வுட் குவித்த 95 ஓட்டங்கள் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியை வசப்படுத்த உதவியது.
இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *