Thursday , September 24 2020
Breaking News

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், அங்கு அதிகபட்ச சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உலகின் 3வது பொருளாதார சக்தியாக திகழும் ஜப்பானில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது.
ஆனால் கடந்த ஒரு வாரமாக அங்கு புதிதாக பாதிப்புகள் அதிக அளவில் உறுதியாகி வருகிறது.

கடந்த நான்கு நாட்களாக நாளொன்றுக்கு 200 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானதை தொடர்ந்து டோக்கியோ நகரில் அதிகபட்ச சிவப்பு எச்சரிக்கையை ஆளுநர் யுரிகோ கொய்கி வெளியிட்டுள்ளார்.

இதனால் டோக்கியோவாசிகள் அவசியமில்லாத பயணங்களை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நகரில் கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் சுற்றுலா ஊக்குவிப்பு போன்ற விடயங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *